தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதி எதிர்வரும் 12ம் திகதி திறக்கப்படும்

எம்.ஜே.எம். முஜாஹித்-

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுமார் ரூபா 400 மில்லியன் செலவில் ஒலுவில் வளாகத்தில் ஆண்,  பெண், மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய விடுதிகள் எதிர்வரும் 12ம்   திகதி செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டவுள்ளதாக பதிவாளர் எச். அப்துல் சத்தார்  தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ள  நிகழ்வுக்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு  புதிய விடுதி கட்டிடங்களை வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளார்.

உயர் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் புதிய விடுதிகளில் ஒரே  தடவையில் 1000 மாணவர்கள் தங்க முடியுமென பதிவாளர் எச். அப்துல் சத்தார் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :