மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கோட்டத்தில் உள்ள ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியலயத்திற்கு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளால் மூன்று வேலைகளுக்காக பதினெட்டு லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வித்தியாலய அதிபர் ஏ.எல்.நெய்னா முஹம்மட் தெரிவித்தார்.
இதற்கமைய விஞ்ஞான ஆய்வு கூட மீதி வேலைக்காக திறன் விருத்தி உற்பத்தி திறன் அமைச்சர் பசீர் சேகுதாவூத் பதினைந்து இலட்சம் ரூபாவும், பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வகுப்பரை திருத்தத்திற்காக ஒரு லட்சம் ரூபாவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தளபாட கொள்வனவிற்காக இரண்டு லட்சம் ரூபாவுமாக பதினெட்டு லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் வேலைகள் இவ் வருடத்திற்குள் முடிவடையும் என்றும் வித்தியாலய அதிபர் ஏ.எல்.நெய்னா முஹம்மட் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment