த.நவோஜ்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் ஆட்டோவில் கொண்டு வந்த கஞ்சாவும், ஆட்டோவும், ஆட்டோ சாரதியும் இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
மீறாவோடை கிராமத்தில் இருந்து பிறைந்துரைச்சேனை பகுதிக்கு ஆட்டோவில் கஞ்சா கொண்டு வரப்படுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான ஆட்டோ ஒன்றினை சோதனையிட்ட போதே அதனுள் 530 கிராம் கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கஞ்சாவுடன் குறித்த ஆட்டோவையும் கைப்பற்றியுள்ளதுடன், ஆட்டோ சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆட்டோ சாரதியுடன் தொடர்புடைய கஞ்சா வியாபாரிகள் சிலர் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆட்டோ சாரதியை விசாரித்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
.jpg)

0 comments :
Post a Comment