கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின்கீழ் வரும் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவகம் அதன் கிளையொன்றை முதற்தடவையாக வடமாகாணத்தில் திறந்து அதன் சேவையை விரிவுபடுத்தவுள்ளதாக புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் நவாஸ் முஸ்தபா தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை(04) மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரத்தில் இந்நிறுவகத்தின் கிளையை திறந்து வைக்கவுள்ளார்.
அமைச்சர் றிஷாத் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்குவதற்காகவே இக்கிளை திறந்து வைக்கப்படுகிறது.

இக்காரியாலயம் திறந்து வைக்கப்படுவதன் மூலமாக வடமாகாணத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பல்வேறு தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்கு எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகள் சிறந்த தொழில்நுட்ப அறிவையும் பயிற்சியையும் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதுடன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய தரமான சான்றிதழ்களையும் இந்நிறுவகம் வழங்கவுள்ளதாக
நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் நவாஸ் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.
நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் நவாஸ் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment