த.நவோஜ்-
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் நிர்மானிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் ஓட்டமாவடி நவீன சிறுவர் பூங்காவானது நோன்பு பெருநாளை முன்னிட்டு விஷேட ஒழுங்குகளுடன் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
பிரதேச சபையின் புறநெகும திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பிரதேச சபையில் தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
நோன்பு பெருநாளை மிக சிறப்பாக கொண்டாடும் நோக்கில் எமது சபையினால் இச்சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான களியாட்ட நிகழ்வுகளையும், விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளையும் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்திருந்தோம். இருந்தும் காஸாவின் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கவனத்திற் கொண்டு இவற்றை தவிர்த்து சாதாரண முறையில் அமைதியாகவும், இஸ்லாமிய ஒழுக்க நெறிகளை பின்பற்றி மிகுந்த கட்டுப்பாடுடனும் ஆறு தினங்கள் சிறப்பாக நடாத்தி முடித்தோம்.
அந்த வகைகளில் இந்நிகழ்வுகளை அமைதியான முறையில் கொண்டாடுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இப்பிரதேச மக்களுக்கும், எமது சிறுவர் பூங்காவிற்கு தமது சிறார்களுடன் வருகை தந்து எமது சபையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த நல் உள்ளங்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இச்சிறுவர் பூங்காவின் வருமானம் நோன்புப் பெருநாள் தினங்களில் 408,790 ரூபாவும், மார்ச் மாதம் முதல் ஜீன் மாதம் வரையான காலப்பகுதியில் வருமானமாக 1,072,570 ரூபாவும் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இவ்வருமானமானது மீள இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கான பயன்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இப்பிரதேச சிறுவர்களின் பொழுது போக்கு நலன்கருதி இச்சிறுவர் பூங்காவில் மேலும் பல நவீன விளையாட்டு உபகரங்களை பொருத்தி முன்னேற்றும் திட்டத்தை மேற்கொள்வதற்கு சபையினால் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சிறுவர் பூங்கா நிர்மானம் தொடர்பில் ஆரம்ப காலத்தில் சில விமர்சனங்கள் எழுந்தாலும் தற்போது சிறுவர் பூங்காவின் இயக்கப்பாடு தொடர்பில் பொதுக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதை நான் அவதானிக்கின்றேன். எனது ஆட்சிக் காலப் பகுதியில் இச்சிறுவர் பூங்கா நிர்மானிக்கப்பட்டமையையிட்டு மிக மகிழ்ச்சியடைவதுடன், இச்சிறுவர் பூங்காவினை பயன்படுத்துவதால் ஒரு சிறுவன் அல்லது சிறுமியெனும் பூரண சந்தோசமடையுமாயின் நான் எனது நோக்கத்தையும், பலனையும் பெற்றவனாவேன்.
இச்சிறுவர் பூங்கா நிர்மானத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கும், இச்சிறுவர் பூங்கா நிர்மானத்திற்காக நிதியுதவி வழங்கி உலக வங்கி மற்றும் அதன் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற புறநெகும திட்ட பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், இச்சிறுவர் பூங்காவினை அழகுற வடிவமைப்பதற்கு பல்வேறு வழிகளிலும் ஆலோசனைகளும், வழிகாட்டலும் வழங்கிய முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கும் விஷேடமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment