மாலைதீவு அரசு காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரித்துள்ளதுடன் இஸ்ரேலுடனான மூன்று இருதரப்பு ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளதாக மாலைதீவு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்ப்பில் விளக்கமலித்துள்ள மாலைதீவு வெளியுறவு அமைச்சர், மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூமின் அரசு, இஸ்ரேலுக்கு எதிராக பின்தங்கிய நிலையில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு பூரண ஆதரவு வழங்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசை உருவாக்கல், பலஸ்தீனுக்கு மனிதாபிமான உதவி வருகையை அனுமதித்தல் போன்ற, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் விசேட கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை நிறைவேற்ற அரபு நாடுகளுடன் இணைந்து செயல்பட தனது நாடும் திட்டமிட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
மாலைதீவுவுக்கு இஸ்ரேலின் எந்த உதவியும் தேவையில்லை. இஸ்ரேலுடன் தொடர்ப்புகளை வைத்துக் கொள்ள மாலை தீவு விரும்பவுமில்லை. எனவே சுகாதாரம், கலாச்சாரம், கல்வி மற்றும் சுற்றுலா துறைகளில் 2009 ல் இரு நாடுகளுக்கும் இடையே நிறைவேற்றப்பட்ட மூன்று ஒப்பந்தங்களை ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment