இந்நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 5ம் திகதி தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி, அதிகாலை 8 மணி முதல் 72 மணி நேரங்களுக்கு இந்த போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கான காலக்கெடு உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணியளவில் முடிவடைந்ததால் இஸ்ரேல் மீது முதலில் ஹமாஸ் இயக்கத்தினர் ரொக்கெட் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் காஸா பகுதியின் மீது 51 முறை பறந்த இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 31 பேர் படுகாயமடைந்தனர். இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் பலியான 1900 பேரில், 429 அப்பாவி குழந்தைகள் மற்றும் 1,354 பேர் பெண்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள் என்று ஐ.நா.சபை கணக்கிட்டுள்ளது.
தொடர்ந்தும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இஸ்ரேல் விருப்பம் தெரிவித்த போதும், ஹமாஸ் இயக்கத்தினர் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








0 comments :
Post a Comment