த.நவோஜ்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பொத்தானை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட பாலை மரங்களை வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
பொத்தானை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலையத்தின் குற்றங்களை தடுக்கும் பிரிவைச் சேர்ந்த குழுவினர் உதவி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சாமர சில்வாவின் தலைமையில் பொத்தானை காட்டுப் பகுதியில் நடாத்திய பரிசோதனையின் போது பாலை மரங்களை வெட்டியவர்கள் மரங்களை விட்டு விட்டு தப்பியோடி விட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பத்து அடி நீளமான பாலை மரங்கள் ஒன்பது கைப்பற்றியுள்ளதாகவும், இதனுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பாக விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
.jpg)
0 comments :
Post a Comment