இஸ்ரேல் பாலஸ்தீனம் தொடர்பில் நவநீதம்பிள்ளையின் நிலைப்பாடு என்ன? ஜாதிக ஹெல உறுமய

ஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிலைப்பாடு என்ன என ஜாதிக ஹெல உறுமய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

 காஸா நிலப்பரப்பில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை தனது கருத்தை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரசார செயலாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார். 

பாலஸ்தீனத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுகின்றனவா? பாலஸ்தீனத்தில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றனவா? என்பது குறித்து நவநீதம்பிள்ளை தெளிவாக விளக்க வேண்டும். உக்ரேனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போர்க்குற்றச் செயல் என நவநீதம்பிள்ளை திட்டவட்டமாக அறிவித்திருந்தார். 

எனினும் பாலஸ்தீன சம்பவங்கள் குறித்து நவநீதம்பிள்ளை மௌனம் காத்து வருகிறார். பாலஸ்தீன இஸ்ரேல் மோதல்களில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெறவில்லையா என கேள்வி எழுப்புகின்றோம். பாலஸ்தீன விவகாரத்தில் நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :