மாதுலுவே சோபித தேரரை வெளிநாட்டு சக்திகள் வழிநடத்தி வருவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மேற்கத்தைய வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து மாதுலுவே சோபித தேரர், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசம் என்ற ரீதியில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
முறைகேடான அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய அரசியல் கலாச்சாரமொன்று உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் கடும்போக்காளர்களுக்கு துணை போகும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவிலயாளர்கள் சிலர் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கம் எந்தவொரு அரசியல் கட்சியிடமும் ஐந்து சதமேனும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வாறு பணம் பெற்றுக்கொண்டது நிரூபிக்கப்பட்டால் பதவிகளிலிருந்து விலகி, இயக்கத்தை கலைக்கத் தயார் எனவும் ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment