இலங்கை அகதிகள் 157 பேர் விடயத்தில் தாம் வெளிப்படையாக நடந்து கொண்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியிருப்பதை அகதிகளுக்கான சட்டத்தரணி ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
157 அகதிகளும் இரகசியமாக கடலில் தடுத்து வைக்கப்பட்டமை, உயிர்காப்பு அங்கிகளை வழங்கி இந்தியாவுக்கு அனுப்ப முயற்சித்தமை மற்றும் இரகசியமாக விமானங்களில் ஏற்றி நவுரு தீவுக்கு அனுப்பியமை போன்ற செயல்களை எவ்வாறு வெளிப்படையான செயல்கள் என்று கூறமுடியும் என்று சட்டத்தரணி ஜோர்ஜ் நியூகௌஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
1939 ஆம் ஆண்டில் ஜெர்மனிய யூத அகதிகள், கியூபாவில் அகதி அந்தஸ்து கோரி படகு மூலம் சென்றபோது அவர்களுக்கு அடைக்கலம் மறுக்கப்பட்டது. அவர்கள் ஐரோப்பியாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர். திருப்பியனுப்பப்பட்ட அகதிகள் 937 பேரில் 600 பேர் நாஸி முகாம்களில் உயிரிழந்தனர். குறித்த 157 அகதிகளும் திருப்பியனுப்பப்பட்டால் இந்தநிலையே நேரும்.
வரலாற்று ரீதியாக அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்த இலங்கையர்களில் 90 வீதமானோர் உண்மையான அகதிகள் என்று இனங்காணப்பட்டனர். இந்தநிலையில், 157 அகதிகளும் நிச்சயமாக உண்மையான அகதிகளாகவே இருப்பர்.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன், நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள தகவலில் 157 பேரும் பொருளாதார அகதிகள் என்று இனங்காட்டியுள்ளார். எனினும் அவர்கள் ஏன் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தனர் என்பதை இன்னும் தமது அரசாங்கம் அவர்களிடம் வினவவில்லை என்பது அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில் இருந்து புரிகிறது.
அத்துடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் மனிதாபிமானமற்ற ரீதியில் நடந்துக்கொண்டுள்ளது. இல்லையெனில் 157 அகதிகள் மத்தியில் உள்ள 50 சிறுவர்களையும் எவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பற்ற இடம் என்று குறிப்பிட்டுள்ள நவுரு தீவுக்கு அனுப்பியிருக்க முடியும் என்றும் நியூகௌஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
sei,

0 comments :
Post a Comment