அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கவனத்திற்கு


ஸிறாஜ் ஏ.மனீஹா-

ட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ஆலம் குழம் மீலாத் நகர் மீள் குடியேற்ற கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியின் முதலாம் குறுக்கு வீதி (வைத்தியசாலை,மற்றும் எம்.பி.சி.எஸ், மேற்குப்புற வீதி) பல வருடகாலமாக புணரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.

மேலும் இவ்வீதியால் வாகணங்களில் செல்வோர் பெரும் இன்னல்கள் அடைவதுடன் பாதசாரிகளும் மிக கஸ்டத்திற்கு மத்தியிலேயே நடந்து செல்லவேண்டியுள்ளது.இவ்வீதியின் பெரும் பகுதி முற்றாக சேதமடைந்து கற்கள் கிளம்பிய நிலையில் இருப்பதனால் இரவு நேரங்களில் இவ்வீதியால் நோயாளிகளை வைத்திய சாலைக்கு கொண்டு செர்ப்பதில் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிய பரிதாப நிலைக்கு உள்ளாக வேண்டியுள்ளது.

 இப்பாதையால் செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுவதனால் வாகனங்களின் டயர்கள்(சக்கரங்கள்) கூட சேதத்துக்கு உள்ளாகின்றது.
இப்பாதையின் சீர்கேட்டினால் போக்குவரத்து செய்ய முடியாமல் மாற்று வழிப் பாதையினால் செல்ல வெண்டியுள்ளதால். வாகனத்திற்கான எரிபொருள் செலவீனம் அதிகரித்து காணப்படுவதாக வாகன சொந்தக் காறர்கள் விசனமும் கவலையும் தெரிவிக்கின்றனர். 

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பல வீதிகள் காபட் வீதிகளாகவும் கொங்ரீட் விதிகளாகவும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வீதி மட்டும் இது காலவரைககும் கவனிப்பாரற்ற நிலையில் புணரமைபக்கப்படாமல் இருந்து வருகின்றது.எனவே இவ்வீதியின் அவல நிலையினை கருத்திற் கொண்டு காலதாமதமின்றி திருத்தியமைக்க அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :