பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக 1 பில்லியன் மான நஷ்ட வழக்கு- அமைச்சர் ராஜித

அஷ்ரப் ஏ சமத்-

மைச்சர் ராஜித்த சேனாரத்தின பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக  1 பில்லியன் ரூபாவுக்கு மானநஸ்டம் கோரி நாளை நீதிமன்றில் வழக்கு தாக்கல் இன்று (7)ஆம் திகதி பிற்பகல் 01.30 மணிக்கு மாளிகாவத்தையில் உள்ள மீன்பிடித்  கடற்றொலில் அமைச்சில் நடைபெற்ற ஊடகமாநாட்டில் அமைச்சர் ராஜித்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் ஊடகங்களில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் எனது  தனிப்பட்ட கௌரவத்திற்கு பங்கம் விளைவித்து அபண்டமான குற்றங்களைச் சுமத்தியதற்காக 1 பில்லியண் ரூபா நஸ்டம்கோரி நாளை எனது பிரபல சட்டத்தரணி ஊடாக மானபங்க வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்.

இந்த ஞானசார தேரர் ஒரு பல குற்றங்களைச் செய்தவர். அவருக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன.  அவர் முதன் முதலில் குடித்துக்கொண்டு வாகன ஓட்டிய வழக்கு கிராண்பாஸ் பொலிசில் உள்ளது. 

அங்கு அவர் குடித்து பலூன் ஊதி பரிட்சாத்த அறிக்கை உள்ளது. ஒரு அமைச்சின் பி,ஓ.ஐ. ;  நிதி, ஒப்பந்தம் சட்டதிட்டம், நிர்வாக முறைதெரியாமல் கல்வியறிவில்லாத இந்தத் தேரர் யாரோ சொல்வதைக் கேட்டுக்கொண்டு அதனை ஊடகங்களுக்குச் சொல்கின்ற தேரருக்கு இந்த  அமைச்சிணைப் பாரம் கொடுத்தால் எப்படி இருக்கும். ஒழுங்காக சுத்தமான சிங்களம் பேசத்தெரியாமல் தூசன வார்த்தைகளையும் பெரிய வாயும் பெரிய தலையும்தான் உள்ளது. 

தேரருக்கு மூழை இல்லை அதில் எமது பௌத்தசாசனத்தின் சீலையை அணிந்து கொண்டு  எல்லாம் நான்தான் என்று உளறித் தெரிகின்றார்.

அவர் ஒழுங்கான ஆளுக்கிட்டதான்  மாட்டியிருக்கின்றார். நான் இன்றும் மதிக்கின்ற அத்துருலியத் தேரர் எல்லாவல  தேரர் பாராளுமன்றத்தில் கும்பிட்டுத்தான் சொல்வேன், ஆனால் இந்தத் தேரர்களால்  தேரர்களையெல்லாம் அவமானத்திற்கு இட்டுச் செல்கின்ற செயல்களை செய்து பௌத்த சாசனத்தை இழிவுபடுத்தி அன்னிய மக்களுடையே பௌத்தம் பற்றி கெட்ட தப்பவிப்பிராயத்தை உலகில்  பரப்புகின்றார்.

இந்த தேரர் முதலில் ஹலால் என்று வந்து முஸ்லீம்கள் பிரச்சினையை ஏற்படுத்தி இறுதியாக  பேருவளை அளுத்கமவில் பாரிய சொத்துக்களுக்கும் உயிர் இழப்புக்களுக்கும்  காரணமாக இருந்தார். இதில் சிறையில் அகப்பட்ட அப்பாவி முஸ்லீம் சிங்கள இளைஞர்களை நானே  காப்பாற்றினேன். தர்கா நகரில் ஏற்படுத்திய சேதங்களுக்கு இந்த அரசே 200 மில்லியன்  ரூபாவை வழங்கியது. இது இந்த நாட்டு வரி செலுத்தும் மக்களது பணம். இதற்கும் அவர் வகை கூறவேண்டும். 

இந்தத் தேரர் இந்த அரசில் உள்ள பல அமைச்சர்களையெல்லாம் அவதூரு சொல்லி  வருகின்றார். இதன் மூலம் ஜனாதிபதிக்கும் இந்த அரசுக்கும் கேடு விளைவிக்கும் செயல்களிலேயே இவர் செயல்படுகின்றார். 

பேருவளை அளுத்கம பிரச்சினையை கிளப்பி முஸ்லீம்களது வாக்குகளை ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இல்லாமல் செய்துள்ளார். இப்பொழுது அரசில் உள்ள என்போன்ற அமைச்சர்களை  வம்புக்கு இழுத்து ஜனாதிபதிக்கு சிங்கள மக்களது வாக்குகளை அழிப்பதற்கே இந்த பொது பல சேனாவும் ஞானதேரரும் செயல்படுகின்றனர். 

இந்தத் தேரர்க்கும் பொதுபலசேனாவுக்கும் எதிராக எனது சக அமைச்சர்கள், நான் நேசிக்கின்ற  தேரர்கள், எனது மக்களும் அணிதிரள என்னைக் கேட்கின்றனர்.

 முதலில் எனது ஊடக மாநாட்டில் சகல குற்றச்சாட்டுக்களையும் தனது அதிகாரிகளுடன் அமைச்சர் விளக்கமளிக்கின்றேன். இதனை மக்களுக்கு தெளிவுபடுத்தியன் பின் நீதிமன்றம் ஊடாக இந்தத்  தேரருக்கு எதிராக நான் பெறப்போகும் 1 பில்லியன் ருபா நிதியை எனது மீண்பிடித்  தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க உள்ளேன். எனத சட்டத்தரணிகள் சகல ஆவணங்களையும்  தயாரித்துள்ளார். 

இந்தத் தேரர் எதிராக பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.  அமைச்சர் ராஜித்தவின் நண்பரும் நோர்வே நாட்டின் லிபரல் பாட்டியின் தலைவருமான அரனி  பிஜி தேரர் பற்றிய அனுப்பிய அறிக்கை அமைச்சரினால் ஊடகவியலாளர்களுக்கு  வழங்கப்பட்டது.

அதில் 2011 ஒக்டோபரில் இந்தத் ஞான தேரருடன் மேலும் 3 தேரர்கள் திலந்த  விதானக்கேயுடன் 5 நாட்கள் நேர்வேவுக்கு வந்திருந்தனர். இவர்களுக்குரிய சகல ஏற்பாடுகளையும்  நோர்வே தூதுவரலாயம் செய்து கொடுத்திருந்தது. இவர்கள் இங்கு வந்து 7 பேர் அடங்கிய  தமிழ் டயஸ்போரா உறுப்பிணர்களை சந்தித்தனர்.

இவர்கள் முதல் கூட்டத்திலேயே நெருங்கிய  நண்பரானார்கள். இலங்கையில் நோர்வே கொடியை எரித்தவர்கள் இவர்கள்தான். அதன்  பின்னர் இலங்கையில் இனங்களுக்கிடையிலான இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு திட்டத்தினை  அமுல்படுத்தினார்கள். 

அதன் பின்னர் சுவீடனுக்கு சென்று சூழல் சம்பந்தமான படம் ஒன்றைப் பார்ககச் சென்றார்கள். மேலும் ஒரு வெப் தளமொன்றை நிறுவுவதற்கு பணம் பெற்றார்கள். அதன் பின்னர் தனிப்பட்ட  விஜயத்திற்காக பிராண்ஸ் நாட்டுக்கு சென்று வந்ததாக நோர்வே நாட்டு அரசியல் கட்சித் தலைவர்  அனுப்பிய நீண்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேரர் நேற்று ஊடகங்களில் கூறிய விடயங்கள் சம்பந்தமாக நான் இன்று காலை  ஜனாதிபதியிடம் கலந்தாலோசித்தேன். ஜனாதிபதி உண்னைப்பற்றி எனக்குத் தெரியும். உனக்கு  அமெரிக்காவில் வீடு உள்ளதா? நீ அன்று பிரேமதாசவுக்கு எதிராக நான் பாதையாத்திரை  செல்வதற்காக உனக்கு இருந்த ஒரு ஜீப்பை தந்து உதவியவன் நீ. இந்த அவருதூறுகளை பற்றி  நீ மறந்து விடு இருந்தும் நான் ஜனாதிபதியுடன் வேண்டிக் கொண்டேன் இவ்வாறு அவதூறு  சொல்லியதை நான் பொதுமக்களுக்கும் என்னை நேசிக்கின்ற மக்களுக்கும நான் விளக்கமளிக்க வேண்டும்.

நான் அரசியலுக்கு வந்து ஒரு கக்கூசைக்கூட நான் கட்டவில்லையே எனக்கு உள்ளது ஒரு வீடு. அன்மையில் எனக்கு இருந்த ஒரு ஜீப்பை விற்று நிலம் ஒன்றை வாங்கி வீடமைப்பு மோக்கேஜ் வங்கியில் கடன் எடுத்து ஒரு வீட்டை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றேன். ஞானதேரரின் குற்றச்சாட்டில் - கதிரேசன் என்ற விடுதலைப்புலியைக் காப்பாற்றியதாகச்  சொல்கின்றார். இந்த கதிரேசன் ஒரு அப்பாவி அவர் தற்பொழுதும் வியாபரம் செய்துவருகின்றார். தமிழ் முஸ்லீம் காணமல் போனவர்களுள் விசாரித்து உதவுவதற்கு  அப்போதைய அரசில் நான் மட்டுமல்ல சிவாஜிலிங்கம், மகேஸ்வரன், வாசுதேவ,டளஸ்  அழகப்பெரும போன்றோர்களை அன்று பாராளுமன்றத்தில் நியமித்திருந்தார்கள். அதில்  50 மேற்பட்டவர்களை n பொலிஸ் பாதுகாப்பு சி.ஜ.டி ஊடாக அவர்களைக் காப்பாற்றினேன். 

தலைமறைவாகியவர்களை கண்டுபிடித்து காப்பாற்றிணோம். இந்த ஞானத்தேரருக்கு எனது அமைச்சில் செயல்படுத்துகின்ற மீன்பிடி மற்றும் மீன் ஏற்றுமதி மீன்பிடிப்பதற்கு இலங்கையில் கொடுக்கப்படுகின்ற லைசன்ஸ் பற்றி பிழையான தகவல்களை பேருவளையைச் சேர்ந்த ஒரு வியாபாரியான ஓமர் என்பவரே கொடுத்துள்ளார்.

இவர்  வியாபரிகள் பலருக்கு நீதிமன்றில் 5 மேற்பட்ட வழக்கு உள்ளது. இவருக்கான பிடிவராந்து  உள்ளது. இவர் மீன் விற்பனை சம்பந்தமான ஏற்றுமதி பிழையாக மோசடி செய்திருந்தால் இவரது 
லைசனை கெண்சல் செய்யப்பட்டது. 

இவர் 3 நாளைக்கு முன் மத்துகமையைச் சேர்ந்த ஒருவரையும் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின  சம்பந்தமாக ஞானதேரருடன் பேசுவதற்கு அழைத்துள்ளார். உரிய நபர் நேரடியாக  ஊடகவியலாளர் முன் இவ் விடயத்தை தெரிவித்தார். உமர் என்பவர் எனக்கும் 5 இலட்ச மோசடி  செய்தவர் இன்னும் களுத்துறையில் வழக்கு உள்ளதாக கூறினார். 

இந்தத் தேரருடன் நேற்று ஊடகமாநாட்டில் பேசியவர். மீண்பிடித் தொழிலாளர்களுக்காக  36 ஆயிரம் ஜக்கட்டுக்களை பெறுவதற்கு ஒரு ஜக்கட்டுக்கு 3600 அறவிட இருந்தார். அதனை  தடுத்தி நிறுத்தினேன். 

இத்திட்டத்தினை எனது அமைச்சின் கீழ் சீநோர் நிறுவனம் 1900  ருபாவுக்கு ஜக்கட் வழங்கி அந்த அரச நிறுவனம் இலாபமீட்டியுள்ளது. இதன்காரணமாக அவர்  ஞானதேரர் இணைந்து கொண்டு எனது அமைச்சின் நிதிமோசடி பற்றி பேசியிருக்கின்றார். எனது மகன் யப்பான் இந்தியாவுக்கு சென்று மீன்பிடி கோட்டா வழங்கி பணம் பெற்றதாகவும்  அவதூறு தெரிவித்துள்ளனர். இதுவும் ஒரு கட்டுக்கதை.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :