முதன் முதலாக தந்தையான, ஒரு பாலினத் தம்பதியரான இரு ஆண்கள், தமது குழந்தையை முதல் தடவையாக பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வடித்தபோது பிடிக்கப்பட்ட படமொன்று இணையத்தில் வேகமாக பரவுகிறது.
கனடாவைச் சேர்ந்த பி.ஜே. பரோன் மற்றும் பிராங்க் நெல்சன் ஆகிய மேற்படி இரு ஆண்களும் வாடகைத் தாயொருவர் மூலம் இக்குழந்தையை பெற்றுள்ளனர்.
குழந்தை பெற்றவுடன் இரு தந்தைகளும் மகிழ்ந்த காட்சியை லின்சே ஃபொஸ்டர் படம் பிடித்து பேஸ்புக் இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தை சில மணித்தியாலங்களுக்குள் பல்லாயிரக்கணக்கானோர் 'லைக்' செய்துள்ளனர். ஒரு ஆணும் பெண்ணும் தமது குழந்தையை நேசிப்பதைப் போலவே இரு தந்தையர்களும் தமது குழந்தையை நேசிக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது' என நெல்சன் தெரிவித்துள்ளார்.
இதுவும் கலாச்சாரம்தானாக்கும்!!!


0 comments :
Post a Comment