அட்டாளச்சேனை பாலமுனை கடற்கரையில் கலாச்சார சீர்கேடுகள் -பாலமுனை ம.கு.கண்டனம்

ட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனைக் கிராம கடற்கரைப் பகுதியில் நோன்புப் பெருநாளுக்கான களியாட்ட நிகழ்வுகள் மிக மோசமான முறையில் நடாத்தப்பட்டு வருகிறன.

இங்கே ஆண்கள் பெண்கள் என்று முஸ்லிம் கலாச்சாரத்துக்கு சீர்கேடான முறையில் இஸ்லாமிய வழிகளுக்கு முற்றுமுழுதாக மாற்றமான முறையில் இருபாலாரும் முண்டியடித்துக் கொண்டு அங்கு களியாட்டங்களில் கலந்து கொள்ள இடமளித்திருப்பதனை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவின் செயலாளர் எம்.ஏ.சதாத் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று பாலமுனை கடற்கரைப்பகுதியில் இடம்பெறும் இந்நிகழ்வு இவ்வூருக்கு மட்டுமல்ல இஸ்லாமிய சமூகத்துக்கே பாரிய சங்கடமும் பளியும் பாவமும் வந்து சேர்த்திருக்கிறது.

குறிப்பிட்ட இந்த நிகழ்வினை இங்கு நடாத்துவதற்க்கு அனுமதி வழங்கியிருக்கின்ற சின்னப் பாலமுனைப் பள்ளிவாசல் நிருவாக சபையினரையும், அட்டாளைச்சேனைப் பிரதேச சபையினரையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் எனவும் இதன் மூலம் உண்டாகும் இளிவுகளை இவர்கள் சுமக்க வேண்டும்.

பதவிகளுக்கு ஆசைப்பட்டு பதவிகளில் இருப்பவர்கள் தாம் இருக்கின்ற பதவியை அல்லாஹ் றசூல் விரும்புகின்ற முறையில் பாதுகாக்கவும் பயன்படுத்தவும் பழகிக்கொள்ள வேண்டும் மாறாக பணத்துக்குச் சோரம்போய் பணம் கொடுத்தால் என்ன நடந்தாலும் எனக்குப்பிரச்சனையில்லை என்று கேவலாமன முறையில் நடந்து கொள்ளுதல் அனைவராலும் கண்டிக்கத்த விடையம்.

கலாச்சார சீர்கேடுகள் எது நடந்தாலும் அதனைத் தடுக்கும் உரிமை அங்குள்ள பிரதேச சபைகளுக்கு இருக்கிறது. அப்படி அனுமதியின்றி நடக்கும் நிகழ்வுகளை நீதிமன்றம் சென்று தடுக்கவும் பலவளிகள் உள்ளது. அப்படியிருந்தும் ஏன் இதனை நடாத்த சின்னப்பாலமுனை பள்ளிவாசல் நிருவாகம் இடமளித்தது என்பதனை நினைக்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு இணையத்தள நிருவனத்தினர் நாலா பக்கமும் சுற்றுமதில் அமைத்திருந்த ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் அரசியல் பிரமுகர்களுடன் அதுவும் தனி ஆண்கள் மாத்திரம் கலந்து கொண்ட முக்கிய விழா ஒன்றில் இஸ்லாமியப் பாடல் என்று சொல்லும் தமிழ் நாடு ஈ.எம்.நாகூர் ஹனீபாவின் பாடலை இசையில்லாமல் பாடியதற்கு குறித்த பள்ளிவாயலின் தலைவர்  அதனை நடாத்த விடாமல் இவ்விடயம் சட்டத்துக்கு முறனாக செய்கிறீர்கள் இதுதொடர்பில் பொலிஸாருக்கு சொல்லப்போகிறேன் உடனே இதனை நிறுத்த வேண்டும் என்றுகூறி அவ்விழாவினை தடுத்து நிறுத்தினார்.

இவ்வாறு நடந்து கொண்ட குறிப்பிட்ட சின்னப்பாலமுனை பள்ளிவாசலின் தலைவர் ஏன் இந்த கலாச்சார சீர்கேடான இந்த நிகழ்வுக்கு இடமளித்திருக்கிறார் என்று விளங்காத ஒரு புதிராக உள்ளது.

கொமிஷன் பெற்று இடமளித்திருகிறார்களா..? அப்படியானால் பணம் கொடுத்தால் என்ன செய்வதற்கும் இடமளிப்பார்களா..? தகுதியற்றவர்களைப் பதவிகளில் அமர்த்தினால் இப்படியான சீர்கேடுகள் வருவதனைத் தடுக்க முடியாது போய்விடும்.

எனவே பாலமுனை கடற்கரையில் இடம்பெற்று வரும் இந்நிகழ்வுகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிருவாகத்தினரிடமும், அட்டாளைச்சேனைப்பிரதேச சபையிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இது தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சிலை தொடர்பு கொண்டு இம்போட்மிரர் செய்தி ஆசிரியர் கேட்டபோது:

இக்களியாட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளிவாயலின் நிருவாகத்தினர் அனுமதி வழங்கியுள்ளதனால் தன்னால் அதனை மறுக்க முடியாத சூழ்நிலையில் தானும் அனுமதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அதனைத் தடுக்குமாறு பள்ளி நிருவாகம் கூறினாலும் உடனே தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக பளிவாயல் நிருவாகச்செயலாளர், மற்றும் உறுப்பினர் ஆகியோரிடம் இம்போட்மிரர் செய்தி ஆசிரியர் தொடர்பு கொண்டு கேட்டபோது:

களியாட்ட நிகழ்சிக்குரியவர்கள் பிரதேச சபையின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு எங்களிடம் வந்து கேட்டதன் காரணத்தினால்தான் நாங்களும் அனுமதி வழங்கினோம் என்று தெரிவித்தனர்.


எது எவ்வாறாயினும் ஒருவருக்கொருவர் குறை சொல்வதனை விட குறிப்பிட்ட நிகழ்வில் கலாச்சார சீர்கேடுகள் இருப்பின் உடனடியாக தடுக்கும் நடவடிக்கையை கையாழ்வதே சிறந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :