லனா-
நாவிதன்வெளி பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சவளக்கடை கமநல சேவைகள் மத்திய நிலையம் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாவிதன்வெளி அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட் மேற்கொண்ட முயற்சியின் பயனாக மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 10 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சவளக்கடை கமநல சேவைகள் மத்திய நிலைய வளாகத்தில் சவளக்கடை பெரும்பாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாவிதன்வெளி அமைப்பாளருமான ஏ.கே.அப்துல்சமட், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் டி.சி.நிஷாதி அபேசேகர, அன்னமலை நீர்ப்பாசன பொறியியல் உதவியாளர் ஹேரத், சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.முனாஸ், சவளக்கடை விவசாய சம்மேளனத் தலைவர் எம்.ஐ.றியால், நாவிதன்வெளி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கமலநாதன் உட்பட விவசாய போதனாசிரியர்கள், கமக்கார அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment