நிந்தவூருக்கு குவாஸி நீதிமன்றம் இல்லையா? அக்கரைப்பற்றுக்குச் சென்று அலைய வேண்டுமா.?




சௌத்துல் உம்மத்-

லங்கையில் குவாஸி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்ட காலந்தொட்டு கடந்த 2013.09.01ந் திகதி வரை நிந்தவூர்ப் பிரதேசத்திலும் குவாஸி நீதிமன்றங்கள் மிகச் சிறப்பாக இயங்கி வந்ததும், மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை போன்ற பிரதேச மக்கள் கூட நிந்தவூர் குவாஸி நீதிமன்றங்களுக்கு வந்து தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு சென்றதும் கடந்த கால வரலாறுகளாகும்.

ஆனால் கடந்த வருடம் நிந்தவூர்க் குவாஸி நீதிபதியாகவிருந்த அல்ஹாஜ்.ஏ.எஸ்.இப்றாஹீம் தனது குவாஸிப் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நிந்தவூரிற்கான குவாஸி நீதிமன்றம் அக்கரைப்பற்று குவாஸி நீதிபதியான அல்ஹாஜ்.எம்.ஐ.அப்துல் காதர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அக்கரைப்பற்றுக் குவாஸி நீதிமன்றம் ஒரு சிறப்பான, பொருத்தமான, நீதிமன்றத்திற்கென்றே கட்டப்பட்ட நிரந்தரக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அக்கரைபபற்று குவாஸி நீதிபதியான அப்துல் காதர் அவர்கள் குவாஸி நீதிமன்றத்தை மிகச் சிறப்பாக (நிந்தவூர் குவாஸி நீதிமன்றத்தை விட ) இயக்கிக் கொண்டிருக்கின்றார். அவர் வழக்குகளை விசாரிக்கும் பாணி, வழக்காளி- எதிர்த்தரப்பினருடன் நடந்து கொள்ளும் விதம், இரகசியம் பேணல், வழக்குகளைக் காலங் கடத்தாமை எல்லாமே மிகச் சிறப்பாக உள்ளன.

இருந்தாலும் அக்கரைப்பற்று மக்களது பிரச்சினைகளுடன் நிந்தவூர், மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு மக்களது பிரச்சினைகளையும் சேர்ததுக் கவனிப்பதில் குவாஸி நீதிபதி மட்டுமல்லாது இங்குள்ள ஏனைய உதவியாளர்கள், இலிகிதர்கள், சிற்றூழியர்கள் எல்லோருமே சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

இதே வேளை நிந்தவூர்ப் பிரதேச எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்p, மாளிகைக்காடு மக்களும் அக்கரைப்பற்று நீதிமன்றிற்கு வருவதில் பொருளாதாரச் சுமைகளோடு, பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.

அக்கரைப்பற்று குவாஸி நீதிமன்றிற்கு மாவடிப்பள்ளியில் இருந்து வரும் ஒருவர் சுமார் 21, 22 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். தெருப் போக்கு வரத்தாக இருந்தால் 3 வாகனங்கள் மாறிப் பிரயாணிக்க வேண்டும். இல்லையென்றால் முச்சக்கர வண்டியில் வருவதாக இருந்தால் ரூபாய் 2000 செலவாகும். காரணம் காலை 8.30க்கு அக்கரைப்பற்றுக்கு வரும் முச்சக்கர வண்டிக்காரர் பெரும்பாலும் மாலை 6 மணிக்குப் பிறகே மாவடிப்பள்ளி செல்ல நேரிடும். இத்தாமதத்திற்கெல்லாம் சேர்த்தே முச்சக்கர வண்டிக்காரருக்கு கூலி வழங்க வேண்டும். கணவனைப் பிரிந்து, பிள்ளை குட்டிகளைக் காப்பாற்ற கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விதவைப் பெண்ணினால் இவ்வாறு செலவளிக்க முடியுமா? பிரதேசவாதம் பேசி, ஏழைகளின் வாக்குகளைக் கொள்ளையிட்டு, எம்பியாகி, நுவரெலியா உல்லாச விடுதிகளில் சல்லாபம் விளையாடிவரும் தம்பிகளுக்கு இது புரியுமா? என மாவடிப்பள்ளி சல்மா கேள்வி எழுப்பினார்.

இது ஒரு புறமிருக்க அக்கரைப்பற்று குவாஸி நீதிமன்றில் ஒரே ஒரு இலிகிதரே பணவசுலிப்புக்கள், பணக் கொடுப்பனவுகள், அழைப்பாணைகள் அத்தனையையும் கையாண்டு வருகிறார். இதனால் நிந்தவூர்,மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு போன்ற பிரதேசங்களிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு, அல்லது கொடுப்பதற்கு போகின்ற ஒருவர் காலை 8.00 மணிக்குப் போனாலும் மாலை 6.00 மணிக்கே அவர் பிரச்சினை முடியக் கூடியதாக உள்ளது. இதனால் சில தனியான விதவைப் பெண்கள் வேறு சில சொல்ல முடியாத பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் வெளி ஊர்களிலிருந்து கேட்கப் பார்க்க ஆளில்லாத விதவைப் பெண்கள் தனியாக வருகிறார்கள், அவர்களோடு விளையாடிப் பார்க்கலாம் எனச் சில  காளைகள் நாக்கை வெளியே தள்ளிக் கொண்டவர்களாக, அக்கரைப்பற்றுக் குவாஸி நீதிமன்றஞ் செல்லும் வீதியின் இரு மருங்குகளில் ஆங்காங்கே நின்று கொண்டு 'உங்கள் கண்கள் அழகாக இருக்கின்றன. நீங்கள் நல்ல கவர்ச்சியாக இருக்கிறீர்கள். நீங்கள் சம்மதம் சொன்னால் சரி. போண் நம்பரைத் தாருங்கள்' என்றெல்லாம் பகடிவதை செய்வதாகவும், இவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு குவாஸியிடம் சொல்லுங்கள். நம்ம ஊருச் சக்கிலியனுகள் நல்லா இருந்தா நமக்கேன் இந்தக் கஸ்டம்?!' என்று நிந்தவூர், அரசடித்தோட்ட விதவைப் பெண்ணான நஜீமா அழுது கொண்டே வீடு வந்துள்ளாள் என்று அறியக் கிடைத்தது.

இதை விட இன்னுமொரு அனியாயம். எந்த ஊராக இருந்தாலும், எந்தப் பெண்னாக இருந்தாலும் எல்லா ஊரும், எல்லாப் பெண்களும் 100 வீதம் நல்லவர்கள் என்று சொல்ல முடியாதே. ஒரு பானைச் சோற்றுக்குள் ஒரு சில குறுட்டுச் சோறுகள்(கறுப்புச்சோறுகள்) கிடப்பது போல் சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கணவன்மாரை விட்டுப் பிரிந்து, அவர்களால் கட்டப்படும் காசை எடுப்பதற்காக குவாஸி நீதிமன்றம் செல்லும் இவர்கள் காலையில் 8 மணிபோல் முச்சக்கர வண்டியில் சென்று இரவு 8மணியளவில் வீட்டுக்குத் திரும்புவதாகவும், கேட்டால் இப்பதான் கோட் முடிந்து வருகிறேன் என்று சொல்வதாகவும், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுவதாகவும், இந்த அனியாயத்தக் கேட்க நிந்தவூரில ஆளில்லையா வாப்பா? என ஆமினா ராத்தா தலையில் அடித்துக் கொண்டார்.

உண்மைதான் மானமுள்ள பெண்கள் பகிடியைக் கூடத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அதற்கு மாற்றமானவர்கள் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அக்கரைப்பற்று குவாஸி நீதிமன்றஞ் செல்வதாகக் கூறிவிட்டு, அவர்கள் வேறு எங்கு சென்று, எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. இவர்களைப் பாதுகாப்பது யார் பொறப்பு?

இதற்கு மேலும் இவ்வாறான தவறுகள். பாவங்கள் நிகழாமல் பாதுகாப்பதும், பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளை விதவைப் பெண்களின் கண்ணீரைத் துடைப்பதும், இவர்களது பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுப்பதும் சமூகத்திலுள்ள பொறுப்பு வாய்ந்த ஒவ்வொருவரினதும் கடமையும், பொறுப்புமாகும்.

எனவே, நிந்தவூரை வழி நடத்திச் செல்லும் ஊர்த் தலைமைகளே, உலமாக்களே, பள்ளிவாசல் நிருவாகிகளே, பாராளுமன்ற உறுப்பினர்களே, மாகாண சபை உறுப்பினரே, பிரதேச சபைத் தலைமைகளே, உறுப்பினர்களே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே இன்னும் தீர்க்கப்படாமலிருக்கும் 'நிந்தவூர் குவாஸி நீதிமன்றப் பிரச்சினையை' விரைவில் தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தயவாய் வேண்டுகிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :