சமூக அபிவிருத்தி ஐக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'மலரும் பூக்கள்'

எஸ்.அஷ்ரப்கான்-

மூக அபிவிருத்தி ஐக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'மலரும் பூக்கள்' விசேட மலர் வெளியீட்டு விழாவும், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய தமிழ், முஸ்லிம் மாணவர்கள் கௌரவிப்பும் எதிர்வரும் 09.08.2014 சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அமைப்பின் தலைவர் எம்.ஐ. எச். ஜமால் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன், கௌரவ அதிதியாக முஸ்லிம் லிபரல் கட்சியின் தலைவர் எம்.எம். இஸ்மாயீல் மற்றும் விசேட அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜெலீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்ரம ஆராய்ச்சி, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் எஸ்.கே. லவநாதன் உட்பட பல முக்கியஸ்தர்களும் மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இதுவரை அழைப்பு கிடைக்காத புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்கள் தங்களது பாடசாலை அதிபரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுமாறும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறும் சமூக அபிவிருத்தி ஐக்கிய ஒன்றியத்தின தலைவர் எம்.ஐ. எச். ஜமால் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :