காஸாவில் இருதரப்புக்குமிடையிலான போர்நிறுத்தம் 72 மணித்தியாலங்கள் வரை


ஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில்  காஸாவில் புதிய மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றிற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இஸ்ரேலிய நேரப்படி காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இருதரப்புக்குமிடையிலான போர்நிறுத்தம் 72 மணித்தியாலங்கள் நீடிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் தெரவித்துள்ளன.

இரு தரப்பினருக்கும் இடையில் நிபந்தனைகள் முன்வைக்கப்படாத நிலையில் போர் நிறுத்தத்திற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதேவேளை போர் நிறுத்த காலப்பகுதியில் இரு தரப்பினரும் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

காஸாவில் மோதல்களை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் நிரந்தர போர் நிறுத்தமொன்றிற்கான பேச்சுவாரத்தைகள் எகிப்தின் கெய்ரோவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 1,400ற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என தெரவிக்ககப்படுகிறது. இதேவேளை 56 இஸ்ரேலிய படையினர் உட்பட அந்த நாட்டு பிரஜைகள் இருவர் ஹமாஸின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. n1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :