ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைபப்பற்று-
அக்கரைப்பற்று முஸ்லிம்மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) 1993/95ல் உயர்தரம்கற்று தற்போது உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் உயர் பதவிகளிலும், தொழில் அதிபர்களாகவும், உயர் நிலைகளிலும் உள்ளவர்கள் தான் கல்வி கற்ற கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ஒரு தொகுதி அலுவலக உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியினை வழங்கியுள்ளனர்.
இந் நிதியினைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.08.2014) 1993/95ல் உயர்தரம்கற்ற மாணவர்கள்அமைப்பின் தலைவர் டாக்டர் எச்.அனஸ் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றபோது 1993/95ல் உயர்தரம்கற்ற மாணவர்கள் அமைப்பினர் இணைந்துஒருலெட்சம் ரூபாவிற்கான ஆவணத்தை கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன் அவர்களிடம் வழங்கினார்கள்.
இதன்N;பாது கல்லூரியின் அபிவிருத்திக்குழு செயலாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான என்.எம்.நஜுமுத்தீன், கல்லூரியின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களான ஆசிரியர் எம்.பி.செய்னுலாப்தீன், ஓய்வு பெற்ற உதவிப் பணிப்பாளர் (இளைஞர் சேவை) ஏ.ஜி.ஏ.கபூர், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும்; 93ஃ95 மாணவருமான எஸ்.எம்.ஸபீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும், 93/95மாணவருமான எம்.ஏ.அன்சில் ஆகியோர்களுடன் 1993/95ல் உயர்தரம் கற்ற மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உத்தியேதகத்தரும், 93/95 மாணவர் அமைப்பின் இணைச் செயலாளருமான எஸ்.எம்.தள்ஹா வின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர் அமைப்பின் தலைவர் டாக்டர் எச்.அனஸ் அவர்களின் தலைமை உரையினைத் தொடர்ந்து, ஐக்கிய ராஜ்யத்தின் லண்டன் நகரில் உளவளத்துணை நிபுணராகக் கடமையாற்றும் எம்.எல்.பதுறுஸ் ஸமான், பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும்; 93/95 மாணவருமான எஸ்.எம்.ஸபீஸ் ஆகியோர்கள் பாடசாலை அபிவிருத்திபற்றி உரையாற்றினார்கள்.
உளவளத்துணை நிபுணராகக் கடமையாற்றும் எம்.எல்.பதுறுஸ் ஸமான்தனதுரையின்போது: பாடசாலையின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளோடு உளவள ஆலோசனை, தலைமைத்துவப் பயிற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் விரிவாக செயற்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் இதன் மூலம் மாணவர்களின் அடைவை கூட்ட முடியும் என்பதோடு, அவர்கள் எந்த பிரச்சினைகளுக்கும் முகங் கொடுக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களாக உருவாக்க முடியும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
_Copy1.jpg)
_Copy1.jpg)

0 comments :
Post a Comment