பலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வரும் இஸ்ரேல் போன்று இலங்கை அரசாங்கத்தை வடக்கை ஆக்கிரமித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு, கிழக்கு, மலையகத்தில் தமிழ் மக்களின் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டு அந்த மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. இன்று வடக்கில் தமிழ் பெண்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பலஸ்தீனத்தில் அத்து மீறி தாக்குதல் நடத்தி இஸ்ரேல் இனச்சங்காரம் செய்கின்றது. அந்த மக்களின் தாயகத்தை ஆக்கிரமிக்கின்றது. அவ்வாறானதொரு நிலையே வடக்கிலும் தோன்றியுள்ளது
வடக்கில் நிலைகொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் வெளியேறி அந்தக் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கான சட்டங்களை இப் பாராளுமன் றம் நிறைவேற்ற வேண்டும். வடக்கு, கிழக்கு மலையகத்தில் காணி சுவீகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள் வது அவசியமாகும்” என்றுள்ளார்.

0 comments :
Post a Comment