நாட்டில் நல்லிணக்கம் தொடர்ச்சியாக கொண்டு செல்வது அனைத்துப் பிரஜைகளினதும் கடமை-ஜனாதிபதி

நாட்டில் அனைத்து சமயங்களையும் பாதுகாக்கும் கடப்பாடு இருப்பதால் அரசு அது தொடர்பில் தீவிரமாக செயற்படும் நிலையில் மிக நீண்டகாலமாக நாட்டில் நிலவிய தேசிய ஒற்றுமை நல்லிணக்கம் என்பவற்றை தொடர்ச்சியாக கொண்டு செல்வது அனைத்துப் பிரஜைகளினதும் கடமை என ஜனாதிபதி தெரிவித்தார். அநுராதபும் மொஹிதீன் ஜும்மா முஸ்லிம் பள்ளிவாசலுக்கு நேற்று மாலை (24) விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

 ஆதிதொட்டு நிலவும் கலாசார பிணைப்பை தொடர்ந்தும் கொண்டு செல்வது மிகவும் அவசியம். எமது நாட்டுக்கேயுரிய அனைத்து இன மக்களுக்கும் பொதுவான கலாசாரம் எம்மிடம் காணப்படுகிறது. வேறு நாட்டின் கலாசாரம் எமக்குத் தேவையில்லை. சகோதரத்துவத்துடன் எமது கலாசாரத்தையும் தனித்தன்மையையும் கொண்டு செல்ல நாம் கைகோர்க்க வேண்டும்.

கோரமான தீவிரவாதத்தினால் இருண்டிருந்த இறந்த காலத்தை நாம் மறந்துவிடக்கூடாது. அவற்றில் கிடைத்த அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கும் அனுபவிக்காமல் இருப்பதற்கு இன,மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் திஸ்ஸ கரல்லியத்த- எஸ்.எம்.சந்திரசேன- வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே முதலமைச்சர் எம்.எம்.ரஞ்சித்- பிரதி அமைச்சர்களான டப்ளியூ.பீ. ஏக்கநாயக்க- வீரகுமார திஸாநாயக்க- பீ. முதுகுமார ஆகியோர் உடனிருந்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :