நாட்டுக்குப் பிரதமர் பதவி தேவை இல்லை. எனவே தற்போதைய பிரதமர் பதவியை ரத்துச் செய்ய வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட யோசனையாகும் என பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறியுள்ளார்.
இந்த நாட்டை சுதந்திர அபிவிருத்தி நாடாகக் கட்டி எழுப்ப வேண்டுமானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்ந்தும் நாட்டுக்குத் தேவை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ரத்துச் செய்யும் கோஷங்கள் முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின் போதும் எழுப்பப்பட்டன.
அது பேச்சுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதென்றும் நாட்டைப் பாதுகாக்க நிறைவேற்று ஜனாதிபதி பதவி அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment