அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றின் இரு பக்கங்களையும் அழகு படுத்தும் நிகழ்வு ஆரம்பம்

சலீம் றமீஸ்-
ட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றின் இரு பக்கங்களையும் அழகு படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினது சிறந்த திட்டத்தின் கீழ் இன்னுமொரு கட்டப்பணியான ஆற்றங்கரை உடற்பயிற்சி நடை பாதைக்கான இன்டலொக்கிங் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசனம்,வீடமைப்பும், நிர்மானமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களுடைய தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சருடன் கிழக்கு மாகாண கல்வி, காணி, காணி அபிவிருத்தி, கலாசார அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், அமைச்சர் உதுமாலெப்பை அவர்களின் அந்தரங்கச் செயலாளர் கியாஉதீன், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஸ்ஸாக், அல் - அர்ஹம் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்ஸார், உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பிட்ட கோணாவத்தை ஆற்றின் இரு கரையோரங்களும் பொதுமக்களினால் குப்பை கூழன்கள் இடப்பட்டு அசுத்தமாக காட்சி அளித்ததுடன், சிலரினால் கோணாவத்தைக்குரிய இடங்களும் அடாத்தாக பிடிக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக இப்பிரதேசத்தில் முக்கியத்துவம் வகிக்கும் இந்த கோணாவத்தை ஆற்றின் இயற்கையை பாதுகாப்பதற்காகவும், கரையோரங்களை சுத்தமாக வைத்திருப்பதற்காகவும், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை போன்ற பிரதேச விவசாயிகளின் விவசாய செய்கைக்கு இந்த ஆறு முக்கியத்துவம் வகிப்பதாலும் அதனை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் முயற்சியினால் குறிப்பிட்ட இந்த கோணவத்தை ஆற்றங்கரை இரு கரையோரங்களும் ஏற்கனவே சுத்தமாக்கப்பட்டு, சூரிய மின்னொளி பொருத்தப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையே இரு கரையோரங்களும் வீதியாக செப்பனிடப்பட்டு நடை பாதைக்கான இன்டலொக்கிங் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :