கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்ற சைக்கிள் விபத்துக்களில் இரண்டாயிரத்து 691 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் சைக்கிள் விபத்துக்களில் 258 பேர் உயிரிழந்துள்ளதாக சபையின் தலைவர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
மின்விளக்குகள் இன்றி இரவு நேரத்தில் செலுத்தப்படுகின்ற சைக்கிள்களே பெரும்பாலும் விபத்துக்குள்ளாகின்றன. சைக்கிள்களின் முன்புறத்தில் வெள்ளை நிற மின்விளக்கும் பின்புறத்தில் சிவப்பு நிற மின்விளக்கும் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த நடைமுறையை பின்பற்றாமல்சைக்கிள்களை செலுத்துவோருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரமுள்ளதாகவும் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.n1st

0 comments :
Post a Comment