காத்தான்குடியிலும், அதனை அண்மித்த பிரதேசங்களிலுமுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கி சத்தம் குறைக்கவேண்டும்

காத்தான்குடியிலும், அதனை அண்மித்த பிரதேசங்களிலுமுள்ள பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியின் சத்தத்தை குறைத்து பாவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், அதன் செயலாளர் ஏ.எல்.எம்.சபில் நழீமி ஆகியோரால் கையொப்பமிட்டப்பட்ட அறிவித்தல்கள் பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த அறிவித்தலில், 'நோன்பு காலங்களில் எல்லா பள்ளிவாசல்களிலும் இரவு நேரதொழுகைகள், அதன் பின்னரான உரைகள் போன்றவை ஒலி பெருக்கியில் அதிகரித்த சத்தத்தோடு ஒலிப்பரப்பப்படுவதால் ஏனைய பள்ளிவாயல்களில் தொழுபவர்களுக்கும், அப்பகுதியிலுள்ள நோயளர்களுக்கும், மாணவர்களுக்கும் பாரிய இடைஞ்சலாக இருப்பதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனை ஒழுங்கு படுத்தும் வகையில் பள்ளிவாயல் மஹல்லாவிற்குட்பட்டவாறு ஒலி பெருக்கியின் சப்தத்தை குறைத்து பாவித்தல் அல்லது முற்றாக தவிர்த்துக் கொள்ளல், தொழுகைகளின் போது ஒலி பெருக்கி பாவனையை முற்றாக தவிர்த்துக் கொள்ளல் என்ற தீர்மானங்கள் சம்மேளனத்தினால் எடுக்கப்பட்டுள்ளதாக தலைவர் எம்.ஐ.எம்.சுபைரால் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது .

நாட்டில் தற்போதுள்ள சூழ் நிலை மற்றும் ஒலி பெருக்கி சம்பந்தமான நாட்டின் சட்ட திட்டங்களை கருத்திற் கொண்டும் தங்களது பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைத்து பாவிக்குமாறு அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :