மருதமனை மக்களுக்கு நன்றி தெரிவிப்பு;

பி.எம்.எம்.ஏ.காதர்-

ண்மையில் அளுத்கமை, பேருவளை, தர்காநகர் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறைகளில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்காக மருதமுனை உலமாசபை, பள்ளிவாசல்கள் சம்மேளனம், அனர்த்த முகாமைத்துவ சபை ஆகிய சமய, சமூக நிறுவனங்களால் மருதமுனைப் பிரதேச மக்களிடம் சேகரிக்கப்பட்ட 8,47,420 ரூபா நன்கொடை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வகையில் அளுத்கம அபிவிருத்தி நிதியத்திடம்; (யுடரவாபயஅய னுநஎநடழிஅநவெ குழரனெயவழைn) யுனுகு) இந்த நிதி அண்மையில் வழங்கப்பட்டது.

இது தொடர்பா வெளியிடப்பட்ட அறிக்கை பின்வரருமாறு :-

சென்ற 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை அஸ்ர்த் தொழுகையின் பின் மஸ்ஜிதுந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க சென்ற 30-06-2014 திங்கள் ஸுப்ஹ் தொழுகையைத் தொடர்ந்து ஒன்பது பேர் கொண்ட மருதமுனையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்கள், ட்ரஸ்ரிமார்கள், அனர்த்த முகாமைத்துவ சபைப் பிரதிநிதிகள் அடங்கிய குழு அளுத்கமையை நோக்கி பயணமாகியது. இதற்கான வாகனச் செலவுப் பொறுப்பை ஏற்ற மஸ்ஜிதுல் கபீர், மஸ்ஜிதுன்நூர் ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

இந்த வகையில் வாகனச் செலவுக்கோ, பிரயாணத்தில் ஏற்பட்ட செலவுக்கோ பொதுநிதியிலிருந்து ஒரு சதமேனும் பயன்படுத்தப் படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி குழு அளுத்கமை, தர்காநகரை அடைந்து அங்கு சிறப்பாகவும் தூய்மையாகவும் இயங்கி வருகின்ற அளுத்கமை அபிவிருத்தி நிதிய உறுப்பினர்களை (யுடரவாபயஅய னுநஎநடழிஅநவெ குழரனெயவழைn) யுனுகு பிரதிநிதிகளை அவர்களது அலுவலகத்தில் சந்தித்து சகோதர உணர்வுகளைப் பரிமாறி 04 காசோலைகள் அடங்கிய சுமார் 8,47,420 ரூபா நன்கொடை நிதியை உத்தியோகபூர்வமாக கையளித்தமையை மருதமுனை வாழ்; மக்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். இது தொடர்பில் வறவைவநச மூலமான குறுஞ்செய்தியை பரிமாறிக் கொண்ட ஊடக நிறுவனங்களக்கும், சமூக வலயத்தளங்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

மேற்படி நிதியை வழங்கிய அனைத்து மருதமுனை வாழ் ஆண், பெண், இஸ்லாமிய நெஞ்சங்கள் அனைவருக்கும் மருதமுனை உலமா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனம், அனர்த்த முகாமைத்துவ சபை ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றன. அத்தோடு தர்காநகரில் எம்மை வரவேற்று, உபசரித்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட எம்மை அழைத்துச் சென்ற சட்டத்தரணி அஷ்ஷெய்க் ஆ.வு.ஆ.ஷாகிர் (நளீமி) அவர்களுக்கும் அவரோடு இணைந்து பணியாற்றிய குடும்ப உறுப்பினர்கள், யுனுகு பிரதிநிதிகள் அனைவருக்கும் மருதமுனை மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். என அந்த அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டள்ளது.

இவ்வண்ணம் 
மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், 
உலமாசபை, அனர்த்த முகாமைத்துவ சபை
நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தால் நான் மென்மேலும் அதிகரித்துத் தருவேன்.

(அல்-குர்ஆன்)

யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ, அவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தப்போவதில்லை (அல்-ஹதீஸ்) 

03-07-2014 – 05 றமழான் 1435 ஹிஜ்ரி

தகவல்: அஷ்ஷெய்க் கு.ஆ.யு.அன்ஸார் மௌலானா (நழீமி) இணைப்பாளர், உலமா சபை-மருதமுனை

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :