த.நவோஜ்-
வெளிநாட்டு வீரர்கள் (ரட்ட விருவோ) வீடமைப்புக் கடன் வேலைத் திட்டத்தின் கீழ் வெளிநாடு செல்லும் நிலையான வீடற்று தொழில் புரிவோருக்காக வீடொன்றினை அமைப்பதற்கான கடன் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சகலருக்கும் வீடு எனும் தொனிப் பொருளின் கீழ் அரசு மேற்கொள்ளும் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கு ஒரு சக்தியினை வழங்கும் நோக்கத்துடன் இலங்கை சமுர்த்தி அதிகார சபையும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் ஒன்றிணைந்து இதனை செயற்படுத்தி வருகின்றது.
இதன் கீழ் வீடொன்றினை நிர்மாணிக்கும் பொருட்டு வழங்கக் கூடிய உயர்ந்த பட்ச கடன் தொகையான மூன்று இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. இதற்கான வருடாந்த வட்டி வீதமாக பத்து வீதமும் அறிவிடப்படுகின்றது.
இதற்கமைய வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் மூன்று பேருக்கு வீடமைப்பதற்காக தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் ஒன்பது இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தட்சணாகௌரி தினேஸ், வாழைச்சேனை சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன், வாழைச்சேனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.கோ.லதா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment