த.நவோஜ்-
மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு இவ்வாண்டு முதன் முறையாக இப்தார் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது.
உள்ளுராட்சி உதவி ஆணையாளரும், நலன்புரி அமைப்பின் தலைவருமான க.சித்திரவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது விசேட சொற்பொழிவினை மௌலவி அஷ்செய்க் எம்.சியாத் (றசாதி) வழங்கியிருந்தார்;.
இதன்போது உள்ளுராட்சி மன்றத்தின் செயலாளர்கள் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 comments :
Post a Comment