இஸ்லாமிய உடைக்குத் தடையில்லை - உயர் நீதிமன்றம்

ஸ்லாமிய ஆடைகள் தொடர்பில் பொது நிறுவனங்களில் சர்ச்சைகள் உருவாக்குவதை தடுக்கும் முகமாக இந்நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்களின் ஆடைக் கலாச்சாரம் நாட்டின் பராம்பரியங்களுக்குட்பட்ட விடயமே என்பதை விளக்கி அனைத்து பொது நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பும் படி சட்டமா அதிபரை பணித்துள்ளது உயர் நீதிமன்றம்.

இலங்க முஸ்லிம்கள் அணிந்து வரும் ஹிஜாப் உட்பட்ட சம்பிரதாயபூர்வமான ஆடைகள் யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக அவை இந்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றிப் பிணைந்தவை என சுட்டிக்காட்டியுள்ள பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், பொது நிறுவனங்களில் புதிதாக சர்ச்சைகளை உருவாக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு 8, ஜனாதிபதி கல்லூரியில் ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் தாயொருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவிலேயே இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதிவாதியான கல்லூரி அதிபர் சார்பாக பொதுபல சேனா மற்றும் ராவணா பலய ஆகிய அமைப்புகள் செயற்பட்டதோடு அவர்கள் சார்பில் சட்டத்தரணி மனோகர டி சில்வாவும், வாதிகள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்திரணி எம்.எம்.சுஹைர் , ஹபீல் பாரிஸ், சப்ராஸ் ஆகியோருடன் சட்டத்தரணி சரித் சமரதிவாகரவும் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :