இஸ்ரேலிய உற்பத்திகளை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் நேற்று இடம்பெற்ற பெருநாள் தொழுகையின் பின்னர் கல்முனை பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டன. பலஸ்தீன முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பு இந்த துண்டுப்பிரசுரத்திற்கு உரிமை கோரியிருந்தது.
முஸ்லிம்களை அழிக்கும் யூதர்களின் ஆயுதமான இஸ்ரேலிய உற்பத்திகளை புறக்கணிக்குமாறு இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உற்பத்திப் பொருட்களிலிருந்து பெறப்படும் வருமானம் நேரடியாக குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவி பலஸ்தீன் மக்களை அழிப்பதற்காக யூதர்களான இஸ்ரேலியர்களினால் பயன்படுத்தப்படுவதாக குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களை கொள்வனவு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்வதன் மூலம் எமது புனித பூமியை காப்பாற்ற முடியும் என அந்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்முனை - தா திடலில் இன்று காலை இடம்பெற்ற பெருநாள் தொழுகையின் போது இஸ்ரேலிய உற்பத்திகளை புறக்கணிப்போம் என்ற விளம்பரப் பலகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment