த.நவோஜ்-
நம்பிக்கை இழந்தவர்களுக்கு சக்தி அளித்து அவர்களுக்கு புதிய வாழக்கையை உருவாக்குவோம் என்னும் தொனிப் பொருளில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் என்பன செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.பிரித்தியோன், சென்றல் போ கண்டிகப் கண்டி நிறுவனத்தின் ஆலோசகர் ஜீவராசா, சென்றல் போ கண்டிகப் கண்டி நிறுவனத்தின் தொழில் நுட்பவியலாளர் சிசிலகுமார, எஸ்கோ நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் செல்வி.கோதை பொன்னுத்துரை ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு செயற்கை உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
எஸ்கோ நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் சென்றல் போ கண்டிகப் கண்டி நிறுவனத்தின் அனுசரணையில் யுத்தம், இயற்கை அனர்த்தங்களால் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அங்கங்களை இழந்த நாற்பத்தேழு பேருக்கு எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான செயற்கை கால் மற்றும் விஷேட தேவையுடைய சிறுவர்களுக்கான கதிரைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment