சலீம் றமீஸ்-
அளுத்கம, தர்கா நகர் பிரதேசங்களில் இடம் பெற்ற தாக்குதல் தொடர்பாக பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மாத்திரம் தான் நமது நாட்டில் எதிர்காலத்தில் இனவாதத்தை இல்லாமல் செய்யலாமென கிழக்கு மாகாண சபை அமர்வு தவிசாளர் திருமதி.ஆரியவதி கலபதி தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எப்.முஹமட் ஷிப்லி அவர்களினால் கொண்டு வரப்பட்ட இனவாதிகளின் நடவடிக்கைகளை கண்டிப்பது தொடர்பான பிரேரனையில் உரையாற்றிய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
கடந்த 30 வருட காலம் நமது நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையால் நமது மூவின மக்களும் பாதிக்கப்பட்டோம்.யுத்தத்தினால் ஏற்பட்ட வலி இன்னும் எம் மக்களின் மனங்களில் இருந்து அகலவில்லை.நீண்ட காலத்தின் பின் மிகவும் அர்ப்பணிப்புடன் பெறப்பட்ட சமாதானத்தை சீர் குலைப்பதற்கு நமது நாட்டில் இயங்கி வரும் பொதுபல சேன இயக்கம் கடந்த பல வருடங்களாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் இனவாத உணர்வுகளை தூண்டி சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சி செய்து வந்தனர்.
வடக்கு,கிழக்கற்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களின் இருப்பிடங்ளை நோக்கியும், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் உடைகள், உணவுகள் என்று ஆரம்பித்து முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்தி கேவலப்படுத்தும் நடவடிக்கைகளை பொதுபலசேனா இயக்கத்தினர் மேற்கொண்டு வந்தனர். இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் பொது பல சேனாவினதும் இனவாத குழுக்களினதும் கொடூரமான நடவடிக்கைகளை பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தனர். இவ்வாறான கொடூமைகளை பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் மக்கள் மீது அளுத்கம-பேருவளை போன்ற பிரதேசங்களில் தங்களின் காடைத் தனத்தை காட்டியுள்ளனர். இலங்கை நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் ஒருபோதும் நமது நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை நாட்டின் சுதந்திரத்திற்காகவும் நாட்டின் இறைமைக்காகவும் பாரிய பங்கினை வழங்கிய வரலாறு முஸ்லிம்களுக்கு உள்ளது.அளுத்கம சம்பவத்தின் பின்னனியில் உள்ள சக்திகள் ஒரு பிரதேசத்தில் ஏற்பட்ட இன மோதலின் போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே முஸ்லிம் மக்கள் மீதான கொடூர தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும். நீண்டகாலமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழும் முஸ்லிம் மக்களின் உறவில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் இன ஒற்றுமையை வளர்க்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு நம் எல்லோரினதும் கடமையாகும். நமது நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் பொதுப்பலசேனா என்ற இனவாதக்குழு உள்ளது. அதே போன்று முஸ்லிம்கள் மத்தியிலும் தங்களின் இனத்தை நேசிக்கின்ற குழுவும் உள்ளது தமிழ் மக்கள் மத்தியிலும் தங்களின் இனத்தை நேசிக்கின்ற குழுவும் உள்ளது. ஆனால் பொதுப்பலசேனாவைப் போன்று இனவாத உணர்வுகளை தூண்டி ஏனைய மதங்களையும் மக்களையும் கேவலப்படுத்தும் ஒரு இயக்கம் இலங்கையில் எந்த இனத்திலும் இல்லை. பொதுபலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் அண்மையில் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் முஸ்லிம்கள் பயங்கரமான குர்ஆனை கைவிட்டு விட்டு அவருடன் இணையுமாறு கேட்டுள்ளார்.
பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் தத்தமது மதங்களில் நம்பிக்கை வைத்து வாழும் அதே நேரம் ஏனைய சமூகத்துடன் புரிந்துணர்வுடன் ஐக்கியமாக வாழும் நிலைமையில் நாம் தொடர்ந்து வாழ வேண்டும்.இனவாதம் நமது நாட்டில் இன்று நேற்று ஆரம்பிக்கபடவில்லை மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க அம்மையார் அவர்களின் ஆட்சியின் பங்காளியான நிலையில் பல வரலாற்று அபிவிருத்தி பணிகள் மேற்கொண்ட போது இலங்கை பாராளமன்றத்தில் எதிர்கட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியினர் இனவாத கருத்துக்களை தெரிவித்தனர்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் ஆட்சி ஒன்று கிழக்கு மாகாணத்தில் நடைபெறுவதாக தெரிவித்தனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் சனசமூகம், இறக்காம பிரதேச செயலகம், நாவிதன் வெளி பிரதேச செயலகம் திறந்து வைத்த போது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புத்தம் சரணம் கச்சாமி ஒலுவில் கரணம் கச்சாமி என்று இனவாதக் கருத்தினை தெரிவித்தனர். அப்போதய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க அவர்கள் பேரினவாதிகள் இனவாதக் கருத்துக்களை தெரிவித்த போதும் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களும், முஸ்லிம்களும் எங்கள் அரசோடு இருக்கின்றனர் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க அவர்கள் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வந்தார். என்பதனை நினைத்துப் பார்க்க வேண்டும்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இலங்கை அரசியலில் முஸ்லிம் சமூகத்தினை ஒற்றுமைப் படுத்தி பேரம் பேசும் நிலைமை உருவாக்கி காட்டினார். முஸ்லிம்களின் பேரம் பேசும் நிலைமை இல்லாமல் போனதற்கு நமது முஸ்லிம் தலைமை செய்த தவறான அரசியல் தீர்மானமே காரணமாகும். இதனால் தான் பல முஸ்லிம் அமைச்சர்கள் மத்திய அரசாங்க அமைச்சரவையில் இருக்கும் நிலமையில் இனவாத அமைச்சர் ஒருவர் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாடம் படித்துள்ளோம். முஸ்லிம்களுக்கு பாடம் படிப்பதற்கு இலங்கையில் வாழும் பௌத்த மக்கள் தயாரான நிலையில் உள்ளதாக பகிரங்கமாக இனவாத கருத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறான இனவாத கருத்துடையவர்கள் அரசியலில் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதற்கு நமது முஸ்லிம் அரசியல் தலைமை விட்ட வரலாற்றுப் பிழையே காரணமாகும்.
அளுத்கம – பேருவளை சம்பவங்களை அரசியலாக்க முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்கட்சியினர்களின் ஒத்துழைப்புடன் எல்லோரும் ஒன்றிணைந்து சபைக்கு ‘கருத்த சால்வைகளை’ அணிந்து வந்து தங்களின் உணர்வுகளை ஜனநாயக ரீதியில் காட்டினார்கள்.
அதே போன்று முஸ்லிம் மக்களுக்கு அளுத்தகம, பேருவளை பிரதேசங்களில் நடைபெற்ற கொடுமைகளைப் பற்றி இலங்கையில் உள்ள 09 மாகாண சபைகளில் முஸ்லிம் முதலமைச்சராக பதவி வகிக்கும் நமது கிழக்கு மாகாண சபையில் எல்லோரும் ஒன்றிணைந்து கண்டனத் தீர்மானம் எடுக்க முடியாத நிலைமை உருவானது. சென்ற மாதம் கிழக்கு மாகாண சபைக் கூட்டம் நடைபெற்றது கிழக்கு மாகாண சபையில் 15 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். முஸ்லிம் சமூகம் தொடர்பான விடயங்களில் கட்சி நலனுக்கு அப்பால் கிழக்கு மாகாண சபையில் ஒற்றுமைப்பட்டு இயங்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். கிழக்கு மாகாண சபையின் ஒழுங்கு விதிகளுக்கு மாறான முறையில் மாகாண சபை உறுப்பினர்களான ஆரீப் சம்சுதீன், ஏ.எம்.ஜெமீல் ஆகியோர்களினால் அளுத்கம தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளை தவிசாளர் நிகழ்ச்சி நிரலில் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்து இனவாதக் குழுக்களின் நடவடிக்கைகளை கண்டிக்கும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எப்.முஹமட் ஷிப்லி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் அளுத்கம - பேருவளை தாக்குதல் தொடர்பாக 4 ½ மணித்தியாலயங்கள் பேசலாம் என தவிசாளர் அனுமதித்தார்.
அதனை ஏற்றுக்கொள்ளமால் பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜெமீல் முஸ்லிம் சமூகத்திற்கு நான் துரோகம் இழைத்துள்ளதாக பத்திரிகை அறிக்கையினை வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 12 கட்சி தலைவர்களின் முன்னிலையில் நடந்த விடயங்களை மறைத்துவிட்டு முஸ்லிம் மக்களின் துரோகியாக என்னை காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார். இந்த விடயத்தை பேசுவதற்கு போதிய நேரம் வழங்குவதற்கு இன்று காலை நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நான் அனுமதி கோரினேன். இந்த விடயங்களை தெளிவுபடுத்த எனக்கு நேரம் வழங்காவிட்டால் எனது சிறப்புரிமை மீறப்பட்டதற்காக நான் நீதிமன்றம் செல்வதற்கு தயாராகவுள்ளேன் என்பதனை இச் சபைக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை சிலர் தங்களது அரசியல் நோக்கத்திற்கு பாவிக்க நினைக்கின்றனர். தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடியதற்காக கிடைக்கப்பெற்ற சபை தான் கிழக்கு மாகாண சபை. இந்த சபை நடவடிக்கைகளை நமது நாடும் சர்வதேசமும் அவதானித்துக் கொண்டு இருக்கின்றது. கிழக்கு மாகாண சபையிலுள்ள 15 முஸ்லிம் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி செயல்படுவதினை விட்டுவிட்டு அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு சிலர் முயற்சி செய்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபையில் 5 வருடங்களாக அமைச்சராக பதவி வகித்து வரும் நான் கிழக்கு மாகாண சபையின் வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக திரு சி.சந்திரகாந்தன் பதவி வகித்த காலத்தில் ஆளும் கட்சியில் அமைச்சர்களாக உறுப்பினர்களாக இருந்துக் கொண்டு வரலாற்று ரீதியில் கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரதேச சபை திருத்தச் சட்ட மூலம், நாடு நகர சட்ட மூலங்களால் சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படும் என்பதானால் மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பிய வரலாறு நமது கிழக்கு மாகாண சபைக்கு உள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment