ஜேர்மனி கால்பந்தாட்ட வீரர்களால் உலகக் கிண்ணம் சேதம்

ஜேர்மனி, பேர்லினில் நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது ஜேர்மனி கால்பந்தாட்ட வீரர்கள் உலகக் கிண்ணத்தை சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரேஸிலில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு ஜேர்மனி கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் நாடு திரும்பிய ஜேர்மனி அணி அதை கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் ஜேர்மனி தலைநகர் பேர்லினில் கால்பந்து அணியின் வெற்றிக் கொண்டாட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது உலகக் கிண்ணம் சேதமடைந்ததுள்ளது.

இது குறித்து ஜேர்மனி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கூறுகையில், உலகக் கிண்ணத்தின் சிறு பகுதி உடைந்து விழுந்துவிட்டது. ஆனால் இது குறித்து கவலைப்பட வேண்டியது இல்லை. இதை சரி செய்யக்கூடும் வல்லமை படைத்தவர்கள் எங்களிடம் உள்ளனர். கிண்ணத்தை யார் உடைத்தார்கள் என்று விசாரணை நடைபெற்றது. எனினும் முடிவுகள் இன்றி விசாரணை நிறைவுபெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :