எஸ்.அஷ்ரப்கான்-
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இன ஐக்கியத்திற்கான இப்தார் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (27) 5.30 மணிக்கு சாய்ந்தமருது பௌஸி ஞாபகார்த்த கடற்கரை மைதானத்தில் கழகத்தின் தலைவர் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த இப்தார் நிகழ்வில் பல இன மார்க்கப் பெரியார்கள், அரசியல்வாதிகள், சமூக தலைவர்கள், பள்ளிவாசல் சம்மேளன உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கழக அங்கத்தவர்கள் பொதுமக்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இங்கு விசேட மார்க்கச் சொற்பொழிவும் தலை சிறந்த மார்க்க அறிஞரால் வழங்கப்பட உள்ளதாக கழகத்தின் ஆயட்காலச் செயலாளர் எஸ். முஹம்மது கான் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment