யூத இராணுவத்திற்கு “ஈத் முபாரக்” சொன்ன அல்-கஸ்ஸாம் போராளிகள்

நேற்றைய திங்கள் காலை தக்பீர் முழக்கங்களுடன் சேர்ந்து பீரங்கி முழக்கங்களும் காஸாவை அதிர வைத்தன. சண்டை நிறுத்தத்தை தருணம் பார்த்து முறித்துக் கொண்ட யூத இராணுவம் மீண்டும் ஒரு இராணுவ நகர்வை ஆரம்பித்தது. இம்முறை அது தனது வியூகத்தை மாற்றி பல முனைகளில் ஒரே நேரத்தில் முன்னேறும் முயற்சியை மேற்கொண்டிருந்தது காஸா சமர்ககளின் 22-ம் நாளில். பல களமுனைகள் திறக்கப்பட்டு தனது சண்டை டாங்கிகளை காஸாவினுள் நகர்த்தியது இஸ்ரேலிய இராணுவம். (IDF). இஸ்ரேலிய போர் திட்டமிடல் வல்லுனர்கள் எதிர்பார்த்தற்கு மாறாக ஹமாஸின் இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் படையணிகள் மீண்டும் ஒரு முறை தாங்கள் யார் என்பதனை எதிரியின் கனரக ஆயுத பலத்தின் முன் நிரூபனம் செய்துள்ளனர். இந்த தாக்குதல் விபரம் பற்றி இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் பிரிக்கேட்டின் ஊடகப் பேச்சாளர் தங்கள் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக டிவீட் செய்துள்ளார். இவரது தகவலை ஹமாஸ் சார்பு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. 

காஸாவின் கிழக்கு புறத்தில் உள்ள Syujai'yah கிராமத்தின் ஊடாக நகர முற்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தை எதிர் கொண்ட கஸ்ஸாம் போராளிகள் அவர்களது நகர்வை சற்று அனுமதித்த நிலையில் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இதில் ஸ்தலத்திலேயே10 யூத இராணுவத்தினர் இறந்து போயினர். இழப்புக்கள் அதிகமாகவும் இருக்கலாம். ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வெளியிட்ட ரோல் கவுண்ட் 10 ஆகும். 

இந்த தாக்குதலில் கவனம் செலுத்தி வந்த இஸ்ரேலிய இராணுவத்தை Nahel Auz எனும் காஸாவின் எல்லைப்புற அரணின் அருகில் இராணுவத்தின் பின் வலத்தில் கஸ்ஸாம் போராளிக் தாக்கியதில் மேலும் 05 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டனர். இவர்களது அசோல்ட் ரைபிள்கள் போராளிகளினால் கைப்பற்ப்பட்டுள்ளன. அத்துடன் அவர்கள் சேதம் எதுவும் இன்றி தமது தளத்திற்கு திரும்பியுமிருந்தனர்.

அடுத்த தாக்குதல் முனையை இஸ்ரேலிய இராணுவம் Qalbah பகுதியில் ஆரம்பித்தது. Khuza'ah-வின் கிழக்கு நோக்கிய நகர்வாக அது இருந்தது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் நகர்வுகளை தொடராக அவதானித்த அல்-கஸ்ஸாம் படையணியின் வேவுப்பிரிவினர் தங்கள் தாக்குதல் அணிகளிற்கு கொடுத்த துல்லியமான தகவல்களிற்கு அமைய இஸ்ரேலிய இராணுவம் தரிப்பிற்கு தேர்ந்த இடத்தை நோக்கி மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டனர் போராளிகள். இந்த தாக்குதலில் மட்டும் 06 யூத இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் டஜன் கணக்கானோர் பலத்த காயங்களிற்கு உள்ளாகி களமுனையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். கஸ்ஸாம் போராளிகள் இந்த தாக்குதலிற்கு 120mm கலிபர் 05 பீஸ் கனன்களை உபயோகம் செய்திருந்தனர். 

தோல்விகளை தாங்க முடியாத ஸியோனிஸ இராணுவம், ஹமாஸின் படையினருடன் போராட முடியாத நிலையில் இன்னொரு களத்தை Jabaliya-வின் கிழக்குத்திசையாக திறந்தனர். அங்குள்ள பயிர்களை அழித்தும், மரங்களையும், வீடுகளையும் புல்டோசர் கொண்டு துவம்சம் செய்தும் தங்கள் தோல்வியினதும், பலம்பொருந்திய இஸ்ரேலிய இராணுவம் பெற்ற அவமானத்தினதும் உணர்வுகளை தீர்க்க முற்பட்டனர். தகவல் அறிந்த இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் பிரிக்கேட்டின் இரண்டு இரண்டு குழுக்களாக 04 பிளட்டூன்கள் Jabaliya-விற்கு விரைந்ததுடன் சடுதியான துப்பாக்கி சமரை ஆரம்பித்தனர். கடும் மோதல் வெடித்தது அங்கே. இரு தரப்பும் ஆக்ரோசமாக மோதிக்கொண்ட வேளையில் தென்புறத்தில் இருந்து இன்னொரு கஸ்ஸாமின் அணி மெல்ல களத்தின் அருகில் சத்தமில்லாமல் நகர ஆரம்பித்து. 

ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்க இராணுவம் தன் இறுதிக் காலங்களில் கணிசமான படையினரை இழந்தது போராளிகளின் சினைப்பர் யுனிட்களினால் தான். ஐ.எஸ்.ஐ.எஸ். இடம் மிகத் தரம் வாய்ந்த சினைப்பர் யுனிட் உள்ளது. இவர்களை ஈராக்கில் வைத்து அமெரிக்க படைகள் சந்தித்தும் இருந்தது. அது போலவே இங்கும் அல்-கஸ்ஸாமின் சினைப்பர் யூனிட் கவர் எடுத்து யூத இராணுவத்தின் தலைக்கவசத்திற்கும், மார்பு ஜெக்கட்டிற்கும் இடைப்பட்ட குறுகிய பகுதியை குறிவைக்க ஆரம்பித்தது. ஆரம்ப சொட்களிலேயே இரண்டு இஸ்ரேலிய படையினர் காலி. உடனடியாகவே எதிரிகள் தங்களை ஒரு பொறிக்குள் இழுத்து விட்டுள்ளதை உணர்ந்த யூத இராணுவத்தினர் தங்கள் துருப்புக் காவி வாகனங்களினுள்ளும், டேங்களிற்கு உள்ளும் புகுந்து கொண்டு பின்வாங்கி செல்ல ஆரம்பித்தனர். 

கான்-யூனிசின் Al-Amur பக்கமாக அடுத்த நகர்வை ஆரம்பித்த இஸ்ரேலிய படையினரை நோக்கி சடுதியாக போராளிகள் பீரங்கி தாக்குதல்களை ஆரம்பித்தனர். அதிலும் அதிகாரிகள் தரத்தில் உள்ள இஸ்ரேலிய படையினர் உயிர் சேதத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரே தினத்தில் 19 படையினர் பலியாகி நூற்றுக்கணக்கானவர்கள் காயங்களிற்கு உள்னான களமாக மாறியது ரமழானின் திங்கள். 19 இராணுவத்தினர் என்பது இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் ஒப்புக்கொண்ட, வெளியிட்ட தகவல். அதனை அடிப்படையாக வைத்தே அல்-கஸ்ஸாம் 19 படையினர் அழிக்கப்பட்டனர் என தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இதனையும் விட அதிகமான இஸ்ரேலிய வீரர்கள் மாண்டு போயிருக்கலாம் என நம்பப்படுகிறது.kt
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :