இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மொயின் அலி மணிக்கட்டில் அணிந்திருந்த ரப்பர் பேண்டை அணியவேண்டாமென இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் போட்டி நடுவருமான டேவிட் பூன் தடை விதித்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் சவுத்ஆம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து அணியில் மொயின் அலி என்ற முஸ்லிம் வீரர் இடம் பெற்றுள்ளார்.
இவர் மணிக்கட்டில் அணிந்திருந்த ரப்பர் பேண்டில் காசாவை காப்பாற்றுங்கள் (ளுயஎந புயணய), பாலஸ்தீனத்திற்கு விடுதலை (குசநந Pயடநளவiநெ) என்று எழுதப்படிருந்தது.
இதை அணிவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும் போட்டி நடுவருமான டேவிட் பூன் தடை விதித்தார்.
சர்வதேச போட்டிகளில் அரசியல், மதம், இன நடவடிக்கைகள் போன்ற வாசகங்கள் இடம்பெறக் கூடாது என்பது ஐ.சி.சி. விதிமுறை கூறுகிறது.
இதுகுறித்து மொயின் அலி கூறுகையில்,
'இதுபோன்ற ரிஸ்ட்பேண்ட் அணிய நடைமுறை இல்லை. இனிமேல் இதுபோல் அணியக்கூடாது என்று போட்டி நடுவர் எச்சரித்தார்" என தெரிவித்தார்.

0 comments :
Post a Comment