இனிய பெருநாள் வாழ்த்துக்கள்......
கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களின்...............
முஸ்லிம்களுக்கு மிகவும் சோதனை நிறைந்த இக்கால கட்டத்தில் ஈமானிய பலத்துடன் ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதற்கு நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் என்று கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
இன்று எமது உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. சில நாடுகளில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது
ஆனால் முஸ்லிம்களையும் புனித இஸ்லாம் மார்க்கத்தையும் இறைவன் நிச்சயம் பாதுகாப்பான். முஸ்லிம் உம்மாவை இந்த உலகில் இறைவன் ஸ்திரப்படுத்துவான். அதில் நமக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. எனினும் அதற்கான தேடலும் முயற்சியும் நம்மிடம் இருக்க வேண்டும். அதற்கு சமூக ஒற்றுமையுடன் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேவேளை புனித இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுகின்ற நாம் அதனை பற்றுறுதியுடன் கடைப்பிடித்து ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான ஒரு தேவையாக கருதப்படுகிறது. அதற்காக முடிந்தளவு நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும். அதன் மூலம் நிச்சயம் நமக்கு வெற்றி உண்டு.
ஏனைய சமூகத்தினர் எம்மை விரல் நீட்டி குற்றம் சுமத்துகின்ற அளவுக்கு எமது செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது. சமூக ஒற்றுமை, இன ஐக்கியம், பரஸ்பரம் புரிந்துணர்வு என்பன கட்டியெழுப்பப்பட வேண்டும். இஸ்லாமிய வழிமுறைகளை மனத்தூய்மையுடன் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பண்புகளை நம்மில் வளர்த்துக் கொள்ள முடியும்.
புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று நமது ஈமான் பலப்பட்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இதனைக் கடைப்பிடிப்பது மிகவும் இலகுவாக இருக்கும் என்பதுடன் தொடர்ந்தும் அதில் உறுதியாக இருந்து முன்னோக்கி நகர்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம். ஈத்முபாரக்
செனட்டர் மசூர் மௌலானா அவர்களின்............
உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான வாழ்வுக்கு இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் செனட்டர் அல்ஹாஜ் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானா வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இன்று உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் தொடக்கம் ஈராக், சிரியா வரை பல அரபு, முஸ்லிம் நாடுகளில் தினமும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். காசாவில் இஸ்ரேலின் கொலைவெறி தாண்டவமாடுகின்றது.
உள்நாட்டில் தலை தூக்குகின்ற முரண்பாடுகள் மற்றும் போராட்டங்களை சாட்டாக வைத்து மேற்குலக நாடுகள், முஸ்லிம் நாடுகளுள் ஊடுருவி அங்கெல்லாம் அக்கிரமங்களை அரங்கேற்றி வருகின்றன. குறிப்பாக அரபுலகின் பலத்தை அழித்தொழிக்கும் திட்டத்துடன் ஏகாதிபத்திய சக்திகள் பல சதிகளை அரங்கேற்றி வருகின்றன.
அதேவேளை முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற பல நாடுகளில் முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் முஸ்லிம்கள் கல்வி, கலாசார, பொருளாதார துறைகளில் நசுக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் முஸ்லிம்களிடையே சமூக ரீதியான ஒற்றுமை பலவீனமடைந்திருப்பதேயாகும்.
ஆகையினால் அரசியல் மற்றும் மார்க்க கொள்கை வேறுபாடுகளைக் களைந்து தேசிய ரீதீலும் உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம் உம்மத் முழுமையாக ஒற்றுமைப்பட்டு- பலமடைவதற்கு உறுதி பூணுவோம்.
அதேவேளை எமது நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் போர் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு- பல இன்னல்களுக்கு மத்தியில் அகதி வாழ்வு நடத்துகின்ற மக்களின் ஈடேற்றத்திற்காக இப்புனிதத் திருநாளில் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். -ஈத்முபாரக்-
ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் அவர்களின்.........
இனிய றமழான் மாதம் பகல் முழவதும் பசியுடனும் தியாகத்துடனும் நோன்பு நோற்று பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடும்போது,
நோன்பிருந்ததன் மூலம் ஏழைகளின் பசியையும் வறுமையையும் உணர்ந்துகொண்டது மட்டுமல்லாமல், அழ்ழாஹ்வின் கட்டளைக்கு முழுக்க அடிபணிந்தவர்களாக இன்று நாம் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.
இந்த இனிய பெருநாள் தினத்தில் எமது சமூகத்தவர்களுடனும், பிற சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து இன்பதுன்பங்களில் பங்கெடுக்கும் உன்னத பணியை செய்ய முஸ்லிம் சமூகம் அனைத்தும் முனவர வேண்டும்.
அதேவேளை இன்று நாம் சந்தோசமாக வாழ்கின்ற பெருநாளைக் கொண்டாடுகின்ற நிலையில் உலகின் பல பிரதேசங்களிலும் பல்வேறு துன்பங்களுடன் எமது இரத்தங்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்காக காபீர்களின் கைகளை முடக்க வேண்டி இரு கை ஏந்தி நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
மேலும் இலங்கையில் இன்றுள்ள சூழலில் முஸ்லிம்கள் பொறுமையுடன் வாழ்ந்து எதிர்காலத்தில் சிறந்த ஆட்சி மலர பிரார்த்திப்பதோடு எமக்கு முன்னுள்ள சவாலை புத்திசாதுரியத்துடன் எதிர் கொள்ள முனைவோமாக அதற்கு இறைவன் எமக்கு அருள்பாலிப்பானாக!
முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர் அவர்களின்...
முசலி கல்வி , சமூக , பொருளாதார அபிவிருத்தி நிறுவனப் பணிப்பாளர் (மெசிடோ) முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர் அவர்கள் விடுத்துள்ள பெரூநாள் வாழ்த்துச் செய்தி ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் ஊடக நண்பர்களுக்கும் இலங்கைவாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் , காஸா முஸ்லிம்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்கவும் , வடபுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு நாட்டின் பல பகுதிகளிலும் சிதறி வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரும் விரைவில் வடபுலத்தில் குடியேறவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இப்புனித நாளில் பிரார்த்;திக்கிறேன்.
ஜுனைட் நளீமி அவர்களின்.....
மழர்ந்துள்ள இப்புனித நோன்புப்பெருநாளில் அனைவருக்கும் நல்லாசி வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். நோன்பின் மூலம் பெற்ற பயிற்சிகள் எமது சமூகத்தை மிள்வாசிப்புள்ள சமூகமாக பரிணாமம் அடையச்செய்ய வழிவகுக்கவேண்டும். அத்தோடு காசா மண்ணின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பயங்கரவாத நடவடிக்கையினால் அநியாயமாக காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்காய் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதோடு மீண்டும் அம்மண்ணில் சத்தியமும், சமாதானமும் நிலைத்தோங்க பிரார்த்திப்பது எமது கடமைகளில் ஒன்றாகும். பலஸ்தினர்களுக்காய் எம்மால் பெளதிக ரீதியில் உதவ முடியாவிட்டாலும் எமது பிரார்த்தனைகள் மூலம் உதவுவோமாக. அத்தோடு இஸ்ரேலிய உற்பத்திப்பொருட்களை பகிஸ்கரிப்பதன் மூலம் எமது பாலஸ்தின அப்பாவி உயிர்களையும் , சிறார்களையும் பாதுகாக்க உதவ முடியும் என்ற செய்தியை பிராந்திய ஜம்மியத்துல் உலமாக்கள், அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுகின்றேன்.
அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் அஸ்மி அப்துல் கபூர்....
தொடர்ச்சியாக நேன்பிருந்து மகிழ்வுடன் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உம்மாவின் உறவுகளுக்கும் மிகவும் கஸ்டமான நெருக்குவரங்களை சந்தித்து அதிலிருந்து மீட்சி பெறவும் இறையஞ்சுவோம்.குறிப்பாக பாலஸ்தீன இஸ்லாமிய பூமியை ஆக்கிரமித்து இருக்கும் யூத நாசகாரகளுக்கு எதிராக உளத்தூய்மையோடு ஒன்றினைவோம். சொந்தங்களோடு அன்பு,கருணை,பகைமை பாராட்டாமல் வாழ இந்த இனிய தினத்திலிருந்து உறுதி பூணுவோம்.அண்ணல் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வழிமுறைகளை பின் பற்றி அவர் வழியில் பயணிப்போமானால் எமக்கு ஒருபோதும் ஒரு துயரமும் ஏற்பட போவதில்லை.
வட மாகான சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ் அவர்களின்...
உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகளின்றி மீள்குடியேறி அவதியுறும் மக்கள் வாழ்விலும், அண்மையில் பேரினவாதிகளால் பேருவள, அளுத்கம, தர்கா நகர் போன்ற ஊர்களில் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு உயிர்கள், உடைமைகள் காவுகொள்ளப்பட்டு அவதியுறும் மக்கள் வாழ்விலும்,இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் வாழ்விலும், உலகளாவிய ரீதியில் குறிப்பாக காசாவில் முஸ்லீம்கள் என்ற ஒரே காரனத்திட்காகவே திட்டமிட்டு கொல்லப்படும் எம் சொந்தங்கள் அதிலிருந்து மீண்டு அவர்கள் வாழ்விலும் நிம்மதியும், சந்தோசமும், மகிழ்ச்சியும் ஏற்பட இப் பெருநாள் தினத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.
அத்துடன் புனித ரமழான் மாதத்தில் நாம் பெற்ற நல்ல பயிற்சிகளை தொடர்ந்தும் எம்வாழ்வில் கடைபிடித்து இறைவனிடம் நல்லதொரு அடியானாக வாழ இந்த சந்தோசகரமான நாளில் திடசங்கட்பம் கொள்வதோடு எம் பெற்றோர்கள், உறவினர்கள், குடும்பத்தார்களோடு சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதோடு சகோதர மதத்தவர்களோடு புரிந்துணர்வோடும், சகவாழ்வு சகோதர பண்போடும் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
எம் பெருநாள் கொண்டாட்டங்கள் யார் மனதையும் புண்படுத்தாமல் , யாருக்கும் இடைஞ்சல் ஏற்படாமல் , எம் சமய , கலை கலாச்சாரங்கள் மீறப்படாமல் அமையும்படி நாம் நடந்துகொள்வதும் இன்றியமையாததாகும்.
உங்கள் அனைவருக்கும் என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள். “ஈத் முபாரக்”
எச்.எம்.ரயீஸ்.
உயர்பீட உறுப்பினர். ( ஸ்ரீ. மு. கா )
வட மாகான சபை உறுப்பினர்.
சமூக வேலைகள் அமைப்பின் தலைவர் ஏ.எம்.மனாஸ் அவர்களின்..
பைஷல் எம் இஸ்மாயில்
அல்லாஹ்விற்காக பசித்திருந்து தனித்திருந்து, விழித்திருந்து அல்லாஹ்வை வணங்கி, நல்லமல்கள் செய்து புனித றமழான் நோன்பை ஒரு மாத காலம் நோற்றுவிட்டு ஷவ்வால் மாதத் தலைப்பிறையைக் கண்டு நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்களுக்கு 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சியடைகின்றேன் என அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஏ.எம்.மனாஸ் விடுத்துள்ள தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று பெருநாளைக் கெண்டாடுகின்ற முஸ்லிம்களாகிய நாம் எங்களுக்குள் ஒற்றுமையாகவும்இ இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஒற்றுமையாகவும்இ அமைதியாகவும்இ வாழ்ந்து இந்த நாட்டை சமாதானப் பாதையிலும்இ வளர்ச்சிப் பாதையிலும் முன்னெடுத்துச் செல்வதற்கான பங்களிப்பின் முக்கிய தாரர்களாக விளங்க வேண்டும் என அன்பான வேண்டுகோளையும் விடுக்கின்றேன்.
நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நன்னாளில் அனைத்து சமூகத்தையும் கண்ணியப்படுத்தி ஒற்றுமையுடனும், சந்தோஷமாகவும்,எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வழி காட்ட வேண்டும் எனப் பிரார்த்திப்பதோடு, இப்புனித பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஏ.எம்.மனாஸ் விடுத்துள்ள தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

.jpg)
.jpg)
+abdus+salam+Unp.jpg)



.jpg)
0 comments :
Post a Comment