பி.முஹாஜிரீன்-
அம்பாறை மாவட்டத்திலுள்ள சில முஸ்லிம் பிரதேசங்களில் நோன்புப் பெருநாள் தொழுகையையடுத்து இஸ்ரேலுக்கு எதிராக நேற்று (29) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகம் மற்றும் பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இஸ்ரேலே உனது காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை உடன் நிறுத்து, இரட்டை வேடம் பூண்டுள்ள அமெரிக்காவே உனது நயவஞ்சகத்தை நிறுத்து, இஸ்ரேலே அப்பாவி முஸ்லிம்கள் மீது ஏன் இந்தத் தாக்குதல்? ஐக்கிய நாடுகள் சபையே ஏன் இந்தப் பராமுகம்? முஸ்லிம் நாடுகளேய விழித்தெழுங்கள் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், மரணித்தவர்களுக்குமான விசேட துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றது.
.jpg)



0 comments :
Post a Comment