இலங்கைக்கான விஜயம் வெற்றியளித்துள்ள-சிரில் ராமபோசா

லங்கைக்கான விஜயம் வெற்றியளித்துள்ளதாக தென் ஆபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிரில் ராமபோசா தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றி கரமாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளும் கட்சியினருடனும் எதிர்க்கட்சியினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தீர்வுத் திட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய தாம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாக, ரமபோசா தென் ஆபிரிக்கா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரையும், ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியினரையும் சந்தித்து கருத்துக்களை அறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒன்றிணைந்து செயற்பட்டு தீர்வுகளை எட்டுவதே சிறந்த வழி என அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :