சாய்ந்தமருது கடற்கரை ஓரத்தில் குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகள் அகற்றி சுத்தம் செய்யும் பணி ஆரம்பம்

எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்,எஸ்.எம்.எம்.ரம்ஸான்-

டந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி கடல்பேரலைகள் காரணமாக நிர்மூலமாக்க்கப்பட்டு அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுகளை அகற்றி சாய்ந்தமருது பிரதேசத்தின் கடற்கரை ஓரங்களை அழகுபடுத்தும் திட்டம் தொடர்பாக, கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதிமுதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சாய்ந்தமருதைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரின் அனுசரணையுடன், இன்று (2014-07-31) காலை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் கூபா பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுகளை அகற்றும் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு மாநகரசபையின் முன்னாள் பிரதிமுதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் அவர்களும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் அவர்களும் கலந்து வேலைகளை ஆரம்பித்து வைத்தனர். இவர்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் எம்.எம்.எம்.றபீக் அவர்களும் கலந்து கொண்டார்.

குறித்த கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுகள் காரணமாக மீனவர்கள் மிகுந்த அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர். அத்துடன் கட்டிட இடிபாடுகளுக்கு மேலாக பிரதேசவாசிகளால் கழிவுகளும் வீசப்பட்டு வருவதால் கடற்கரையின் அழகு அலங்கோலப்பட்டு கிடந்ததும் குறுப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :