கண்ணியமிக்க உலமாக்களே! புத்தி ஜீவிகளே! தாய்மார்களே! சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
'ஈதுல்பித்ர்' பெருநாள் வாழ்த்துக்கள்
எம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் சுமத்தப்பட்ட ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை கடந்த ரம்ழான் மாதம் முழுவதும் நோற்று, தான தர்மங்களிலும் ஈடுபட்ட திருப்தியில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான 'ஈதுல்பித்ர்' பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன்.
அதே போல் பொருளாதார ரீதியாக, மிகவும் கஷ்டமான நிலையில் இருந்த போதும், அவைகளைச் சமாளித்துக் கொண்டு கஷ்டத்திலும், வறுமையிலும் இக்கடமையை நிறைவேற்றிய அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
எது எவ்வாறாக இருந்தாலும் இக்கடமையை நிம்மதியாகவும், மகிழ்ச்சியுடனும் நிறைவேற்றிய நிம்மதிப் பெருமூச்சை விடும் நாம், தமது சொந்த வீடுகளையும், பொருளாதாரங்களையும் இழந்து, அகதி முகாம்களில் கடந்த ரம்ழான் மாதம் முழுவதையும் கழித்த, எமது உடன் பிறப்புக்களான பேருவளை, அழுத்கமை, டர்ஹாடவுண் பிரதேச மக்களின் அவல நிலை குறித்து இப்புனித ஈகைத் திருநாளில் எண்ணிப் பார்ப்பது எம் அனைவரதும் கடமையாகும்.
எமது நாட்டில் இஸ்லாமிய விரோதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் அச்சுறுத்தல்களிலிருந்து முழுமையாக விடுபடாத நிலையிலேயே, இவ் ஈகைத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக் கொள்வோமாக.
இவ் அச்சுறுத்தல்களில் இருந்து நாமும். எமது நாடும் விடுதலை பெற வேண்டி பிரார்த்திப்போமாக
என் அன்புச் சகோதர சகோதரிகளே!
இதே ரம்ழான் மாதம் முழுவதும் சியோனிச இஸ்ரவேலர்களின் காட்டுமிராண்டித் தனமான குண்டுத் தாக்குதல்களில் சிக்கி, தினந்தோறும் தனது உடன் பிறப்புக்களை இழந்து, இற்றை வரை ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களைப் பலி கொடுத்துள்ள 'காசா' மக்களின் துயரம் பற்றி அறிந்திருப்பீர்கள்.
நூற்றுக் கணக்கான பச்சியம் குழந்தைகளும், தாய்மார்களும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டு வரும் காட்சிகளைக் கண்டு, கண் கலங்கியும் இருப்பீர்கள்.
இம்மக்களின் நிரந்தரமான நிம்மதிக்காகவும், இஸ்ரேலிய சியோனிஸ்டுகளின் தோல்விக்காகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக.
அவ்வாறே அமைதி இழந்து கிடக்கும் பலஸ்தீனம், சிரியா, ஈராக், எகிப்து, ஆப்கானிஸ்தான், லெபனான், பர்மா போன்ற நாடுகளில் வசிக்கும் எமது இரத்த உறவுகளின் நிம்மதியான விடிவிற்காகவும் பிரார்த்திப்பாமாக.
வஸ்ஸலாம்
அன்புடன்
எம்.ஐ.எம்.மன்சூர்
சுகாதார, சுதேசவைத்திய, விளையாட்டுத்துறை,
சமூக சேவை, சிறுவர் நன்நடத்தை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர். - கி.மா.
அமைப்பாளர் - ஸ்ரீ.ல.மு.கா. சம்மாந்துறைத்தொகுதி.
சமூக சேவை, சிறுவர் நன்நடத்தை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர். - கி.மா.
அமைப்பாளர் - ஸ்ரீ.ல.மு.கா. சம்மாந்துறைத்தொகுதி.

0 comments :
Post a Comment