சவூதி அரேபியாவில் இன்று 29ம் நோன்பு லைலதுல் கத்ரு இரவு


 வூதி அரேபியாவில் இன்று 29ம் நோன்பு லைலதுல் கத்ரு இரவு என்பதை அல்லாஹ் வெளிப்படுத்தி விட்டான். மாஷா அல்லாஹ் மக்கா புனித மஸ்ஜிதுல் ஹரமில் தற்பொழுது மழை பெய்ய ஆரம்பித்திவிட்டது.

கடந்த மூன்று மாதங்களாக சவூதி அரேபியாவில் கடும் வரட்சியான காலனிலையே நிலவி வந்தது வழமைக்கு மாற்றமாக இன்று 29ம் நோன்பு காலையில் இருந்தே மேகக்கூட்டங்கள் காணக்கூடியாதாய் இருந்தன.

ஹதீஸ்களில் லைலதுல் கத்ரு இரவு பற்றி குறிப்பிட்ட அடையாளங்களுடன் நோக்கும் போது இன்று 29ம் நோன்பு லைலதுல் கத்ரு இரவு என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாய் உள்ளது.எனவே இதனை எம் சகோதரர்களுக்கு தெரியப்படுத்துவதோடு முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும்  இபாதத்துகளில் ஈடுபட்டு லைலதுல் கத்ருடைய பிரயோசனத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

ரமழான் மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்ததொரு இரவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். லைலதுல் கத்ர் அதாவது கத்ருடைய இரவு என அழைக்கப்படும் அவ்விரவில் தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது.

லைலதுல் கத்ருடைய சிறப்பை பற்றி அல்லாஹ் பின்வருமாறு ஸூரதுல் கத்ரில் கூறுகிறான்.

'நிச்சயமாக நாம் அல்குர்ஆனை லைலதுல் கத்ரிலே இறக்கிவைத்தோம்.. லைலதுல் கத்ர் என்றால் என்ன என்பதை உமக்கு யார் அறிவித்தது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும். ஜிப்ரீல் (அலை) அவர்களும் மலக்குமார்களும் இறைவனின் கட்டளையின் பேரில் பூரண சாந்தியோடு உலகிற்கு இறங்குவார்கள். அது அதிகாலை உதயம் வரை நீடிக்கும்'. (ஸூறதுல் கத்ர்)

மலக்குமார்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகையால் உலகம் அமைதியடைகிறது. அந்த இரவில் செய்யும் நன்மைகளுக்கு ஏனைய இரவுகளை விடவும் விஷேடமான கூலிகள் காத்திருக்கின்றன.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :