பிரதேச சபைகளுக்கான மாதாந்த 10 இலட்சம் தவிசாளர்களிடம் அமைச்சர் அதாஉல்லா வழங்கிவைத்தார்





அஷ்ரப் ஏ சமட்-
ம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில்உள்ள பிரதேச சபைகளுக்கும் சப்ரகமுகவ மாகாணத்தில் ஆகிய 60 பிரதேச சபைகளின் ஒவ்வொரு சபைக்கும் தமது சபையின் பொது பராமரிப்புக்காக 10 இலட்சம் ருபா அமைச்சர் அதாவுல்லாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இக் காசோலைகள் அமைச்சர் அதாவுல்லா 60 பிரதேச சபைத் தலைவர்களிடமும் அவரது அமைச்சில் வைத்து கையளித்தார் இந் நிகழ்வில் 60 பிரதேச சபைகளின் தலைவர்களும், பிரதியமைச்சர் இந்திக்கா பண்டார, அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ. ரணவக்காவும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைசச்ர் அதாவுல்லா- பிரதேச சபை நகர சபைகளின் தலைவர்களினால் தமது சபையில் சமர்ப்பிக்கப்படுகின்ற வருடாந்த வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டியதில்லை.

அதற்காகத்தான் இன்று நடைபெற்ற அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு

ஜனாதிபதியால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. அது மிகவிரைவில் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் ஆகவே சபைகளின் தலைவர்கள் தமது பதவிகுறித்து வருடாந்த வரவு
செலவுத்திட்டத்தில் தோற்கடிக்கப்பட்டால் கவலைகொள்ளத்தேவையில்லை. இனி சந்தோசமாக தமது பதவியைத் தொடரலாம்.

ஆனால் தமது பிரதேச சபைகளில் நடைபெறும் கலவரம் இனங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை அடிமட்டத்தில் அறிந்து அதனை இனக்கப்பாட்டுடன் நிறுத்தக்கூடிய பொருப்பு உங்களிடம் உள்ளது.

நீங்கள் தான் ஒவ்வொரு ஊரின் அடிமட்டத் தலைவர்கள். அண்மையில் நடைபெற்ற பேருவளை அளுத்கம பிரச்சினையை அடிமட்ட தலைவர்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை. பிரச்சினை நடைபெற்ற பின் 2 மணித்தியாலயத்திற்கு பின்பே ஜனாதிபதிக்கே அல்லது அமைச்சர்களுக்கு அறியவரும். ஆகவே நீங்கள் தான் தத்தமது ஊரைக் காப்பாற்ற் வேண்டியவர்கள்

இந்தப் இனகுரோதங்களை ஏற்படுத்த சில சர்வதேச சதிகள்தான பின்னால் உள்ளன.

இதற்குப்பின்னால் பாரிய என்.ஜி.ஓ களும் உள்ளன. அவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தவென அபிவிருத்தி என்ற போர்iவியல் நிதி வழங்கப்படுகின்றது. இந்த என்.ஜி.ஓக்கள் தமிழி, முஸ்லீம் சிங்கள சகல சமுகத்திலும் உள்ளன. கடந்த கால வட கிழக்கு யுத்தத்தில் இவ்வாறாக நோர்வே நிதி வழங்கி இனங்களை குரோதப்படுத்திய வரலாறு உள்ளது. ஆகவே தான் மக்களோடு மக்களாக ஊரில் வாழ்பவர்கள் நீங்கள். இவ்வாறான பிரச்சினை ஏற்படும்போது பிரதேச சபைத்தலைவர்கள் கண்னும் கருத்துமாக இருக்க வேண்டும். அடிமட்டத்திலேயே பிரச்சிணைகளை தீ;ர்க்க
வேண்டும்.

இவ்விடயத்தில் அரசியல் தலைமைகள் நிதாணமாக சிந்தித்து இனங்களுக்கிடையிலேயே குரோதத்தை உண்டுபண்னும் வார்த்தைகளை பிரயோகிக்காமல் நடந்து கொள்ளவேண்டும். என ;. அமைச்சர் அதாவுல்லா கூறினார்.

இந்த நிதி தங்களது பிரதேசத்தில் உள்ள பொதுவேலைப்பாடு மெசின்களுக்கு எரிபொருள் நிரப்பவும் மற்றும் பல்வேறு மெசின்களை செயல்படுத்தவும் பொது பாராமரிப்புக்கும் இந் நிதி வழங்கப்படுகின்றது.எவ்வாறாயினும் உங்களது திட்டஙகளை சமர்ப்பித்தால் உடன் நிதி வழங்கப்படும். என அமைச்சர் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் இந்திக்க பண்டார உரையாற்றுகையில் இந்த நாட்டை ஆண்ட ஜனாதிபதி மட்டத்திலும் இருந்து இந்த அமைச்சினை பதவி வகித்துள்ளார்கள்.

ஆனால் அமைச்சர் அதாவுல்லாவின் காலமே பொற்காலம் எனலாம். அதற்காக நீங்கள் அதிர்ஸ்டசாலிகள். இந்த அமைச்சின் ஊடாக பல்வேறு அபிவிருத்திகள் நன்மைகள் நாளாந்தம் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறாக நிதிகளைப் பெற்றெடுப்பதற்கு

ஜனாதிபதி உடன் அனுமதி அளித்துள்ளாh. அமைச்சர் அதவுல்லாவின் வேண்டுகோலின் பேரில் பிரதேச சபைத்தலைவர்களுக்கு மேலும் 100 பிக் அப் வாகணங்கள் வாங்குவதற்கும் ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளார். இதுவரை பிரதேச சபையினை தமது வருமாணத்தின் கீழே முகாமைத்துவம் செய்து வந்தீர்கள். இன்று உங்களுக்கு 10 இலட்சம் ருபா ஒவ்வொரு மாதத்திற்கும்

வழங்கப்பட்டுள்ளது. இது அமைச்சரின் சிறந்த முகாமைத்துவமாகும் என பிரதியமைச்சர் இந்திக்க தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :