கறுப்பு நிற அபாயாக்களுக்கு பதிலாக மாற்று நிறங்களை நடைமுறைப்படுத்தவும்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டும், பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படும் பரப்புரைககளை அடிப்படையாக வைத்தும், முஸ்லிம் சமூகம் தொடர்பான தவறான பார்வைகளையும் தவிர்க்கும் முகமாக கறுப்பு நிற அபாயாக்களுக்கு பதிலாக மாற்று நிறங்களை ஊக்குவிக்கும் முயற்சியில் சிவில் சமூகம் ஈடுபடவுள்ளது.

இதற்கமைய முஸ்லிம் வர்த்தகர்களின் உதவியுடன் கறுப்பு நிற அபாயாக்களைக் கொண்டு வருபவர்களுக்கு மாற்று நிறங்களிலான இலவச அபாயா விநியோகமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. ஒருசில பொது இடங்களில் அதிகளவானோர் கறுப்பு நிற அபாயாக்களில் கூடியிருப்பதைக் காணும்போது அது தொடர்பான தவறான கணிப்புகளும் கருத்துக்களும் பரப்பப்பட்டு வருகின்றமையை கவனத்திற்கெடுத்தே இவ்வாறான நடவடிக்கை பற்றிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.

கலாசார ரீதியான வித்தியாசத்துடன் ஒன்றுபட்ட இலங்கையில் முஸ்லிம்கள் வாழும் அதேவேளை அரபு நாடுகளில் காணப்படும் கலாசாரங்களை இறக்குமதி செய்வது மூலம் இலங்கை முஸ்லிம்கள் தம்மிலிருந்து அந்நியப்பட்டுப் போவதாக பெரும்பான்மையான சிங்களவர்கள் சிந்திப்பதாகவும் கருத்து நிலவுகின்ற அதேவேளை இலங்கையில் போரா சமூகம் காலாகாலமாக ஹிஜாபுடனேயே காணப்படினும் அவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு நிறங்களை உபயோகிப்பதால் அது யாருடைய கண்ணையும் குத்துவதில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்கள் கறுப்பு அபாயாக்களில் ஒரே இடத்தில் கூடி நிற்கும்போது அது ஒரு சீருடையுடன் குழுவொன்று நிற்பது போன்ற தோற்றப்பாடடையும், சந்தேகங்களையும் கூட உருவாக்கிவருகின்றதாக கருத்துக்கள் நிலவுகின்றன.

இதனடிப்படையில் கறுப்பு நிறத்தில் அபாயா மற்றும் நிகாப் அணிவதற்குப் பதிலாக வேறு நிறங்களை ஊக்குவிக்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் சமூகமும் பல முன்னெடுப்புகளை செய்கின்றது என்பதை நிரூபிக்கக்கூடிய வழிமுறைகளாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :