முஸ்லீம்களின் பொருளாதாரம் திட்டமிடப்பட்டு குறிவைக்கபடுகிறது. எச்.எம். ரயீஸ்

ளுத்கம , பேருவளை, தர்ஹா டவுன் போன்ற இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கலானது தற்செயலாக நடைபெற்ற ஒரு சம்பவமன்றி அது ஒரு நன்கு திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்திட்கெதிராக மேட்கொள்ளபட்ட இன வெறியாட்டமாகும். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

இச்சம்பவமானது குறித்த இடங்களில் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அச்சுறுத்தல் அன்றி முழு நாட்டு முஸ்லீம்களுக்கும் விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகவே பார்க்கின்றேன் . இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டியது நாட்டின் ஜனாதிபதிக்கும்,அரசிற்கும் உள்ள கடப்பாடாகும்.

இந்த இன வெறியாட்ட சம்பவங்களை சர்வதேச மயப்படுத்தி அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி தேடிக்கொடுக்க எமது தேசிய தலைவர் கௌரவ ரவூப் ஹகீம் அவர்கள் தேவையான நடவடிக்கைகளை துனீகரமாகவும், சமயோசிதமாகவும் மேற்கொண்டு வருகிறார்.

அத்துடன் இன்று இடம் பெற்ற நோ லிமிட் காட்சியறை தீயிட்டு கொளுத்தப்பட்டமையானது முஸ்லீம் மக்களின் பொருளாதரத்தை குறி வைத்து தாக்கும் மற்றுமோர் வெறியாட்டமாகும். .இதையும் வன்மையாக கண்டிப்பதோடு இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். 

இந்த இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லீம் மக்கள் மிக அறிவுப்பூர்வமாக செயற்பட்டு, எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போமாக.
வஸ்ஸலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :