பதுளையில் ஜனாதிபதிக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உயர் மட்ட பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் இளங்ககோனுக்கு நாட்டில் அமைதியையும்,சமாதானத்தையும் உடனடியாக ஏற்படுத்துமாறு பணிப்புரை வழங்கினார்.
இதற்கிணங்க பொலிஸாரும் புலன் விசாரணை பிரிவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும் பேரவை அங்கத்தவரும் ஊடகத்துறை மேற்பார்வை எம்பியுமான அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் பொலிஸ் மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நேற்றிரவு பொலிஸ் மா அதிபர் இளங்ககோனுடன் பேசிய அஸ்வர் எம்.பி, பதுளையில் ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தைக்கு இணங்க உடனடியாக செயலில் இறங்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை தெஹிவலையில் ஒரு அபாயா வியாபார நிலையத்துக்கு சில விஷமிகள் கல் எறிந்தது குறித்தும் ஹார்கோர்ட் மருந்தகத்துக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் விசாரனை செய்து நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோன்று குருநாகல் மாவட்ட பன்னலை மல்லவபிட்டி பள்ளிவாசல் தாக்குதலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் குருநாகல் மாவட்டத்தில் சிங்கள முஸ்லிம் உறவு நூற்றாண்டு காலமாக மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் இதனை சீர்குலைத்து அரசாங்கத்தின் மீது பழி சுமத்துவதற்கு சில தீய சக்திகள் முனைந்து வருவதாகவும் பொலீஸ் மா அதிபருக்கு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பாதுகாப்பு பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அஸ்வர் எம்பி கேட்டுக் கொண்டார்.
த
த
.jpg)
0 comments :
Post a Comment