இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அஸாத் சாலி தெரிவித்த;சில நாட்டுக்கு தேவையான முக்கிய கருத்துக்கள்

ன்முறை தொடர்பாக விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றே வேண்டும் ;அளுத்கமை சம்பம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்குழு நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி சுறுகின்றார். அவரின் நண்பர்களைக்

கொண்ட அப்படிப்பட்ட ஒரு விசாரணைக் குழு எமக்கு தேவையில்லை. இந்த சம்பவங்கள் பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவென்று நியமிக்கப்படவேண்டும். 

அதனாலும் பெரிதாக எதுவும் நடக்கப் போவதில்லை. இருந்தாலும் பல சாட்சிகளைப் பதிவு செய்து மறைந்து கிடக்கும் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம். 

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் பட்சத்தில் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராக உள்ளோம். இந்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். இதற்கு ஆதரவு வழங்கியவர்கள் உத்தரவுகளை வழங்கியவர்கள் போன்றவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். 

அதற்கு தேவை ஜனாதிபதி ஆணைக்புகுழுவே தவிர வெறுமனே உயர்மட்ட விசாரணைக் குழுவல்ல. பல சமயத் தலைவர்களும் இதே கருத்தை தான் வலியுறுத்தியுள்ளனர் என்பதையும் சுறிக் கொள்ள விரும்புகின்றேன். என மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்தார்

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பு இன்று (25.06.14) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்

எனது வீட்டுக்கு அருகில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள்:

நேற்று முன்தினம் எனது வீட்டுக்கு அருகில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நின்று கொண்டு எனது வீட்டுக்கு வரும் நபர்களையும் அவர்கள் பயணம் செய்யும் வாகனங்களையும் நோட்டம் விட்ட வண்ணம் இருந்தனர். எனது வீட்டுக்கு வந்து விட்டு செல்லும் வாகனங்களை இடை நடுவில் நிறுத்தி அவர்களது விவரங்கள் என்னை ஏன் சந்திக்க வந்தார்கள்? 
என்னோடு உள்ள தொடர்பு என்ன? 

என்பன போன்ற கேள்விகளை தொடுத்து அவர்களை அசௌகரியத்துக்கு ஆளாக்கினர். நான் மிகவும் சூட்சுமமாகச் செயற்பட்டு எனது நண்பர் ஒருவரை வரச் சொல்லி அவரது வாகனத்தை எனது வீட்டுக்கு அருகில் சற்று நேரம் நிறுத்தி வைக்கும்படி கூறினேன்.பொலிஸார் இந்த வாகனத்தை அவதானிப்பதை நான் அவர்களுக்கு தெரியாமல் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். எனது வீட்டுக்கு வரும் வாகனங்கள் மட்டுமே பொலிஸாரால் மறிக்கப்படுகின்றன என்பதை நன்கு உறுதி செய்து கொண்ட பின்னர் பொலிஸார் இருவரும் வேறுபக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த போது அவர்களுக்குத் தெரியாமல் நான் அந்த வாகனத்தில் ஏறிக் கொண்டு பொலிஸார் இருந்த திசை பக்கமாக வாகனத்தில் சென்றோம். அதற்கிடையில் நான் சிரச ஊடகத்துக்கு இதுபற்றி அறிவித்து அவர்களின் உதவியை வேண்டினேன். அவர்கள் உடனடியாக அருகில் கடமையில் இருந்த ஒரு படப்பிடிப்பாளரை ஸ்தலத்திற்கு அனுப்பி வைத்தனர் நான் காரில் இருக்கின்றேன் என்பது தெரியாமல் பொலிஸார் மற்ற வாகனங்களைப் போலவே எமது வாகனத்தையும் நிறுத்தினர். நான் இறங்கியதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். யார் உங்களை அனுப்பினார்கள்? எதற்காக எனது வீட்டுக்கு வருபவர்களுக்கு தொல்லை கொடுக்கின்றீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது, உயர் அதிகாரிகள் பலர் கூறித்தான் தாங்கள் இந்தக் காரியத்தில் ஈடுபட்டதாகக் கூறினர். நான் உடனடியாக அந்த இடத்தில் இருந்து பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்றார் அந்த பொலிஸாரின் கையில் இருந்த கடதாசித்துண்டும் தற்போது என்னிடம் உள்ளது. அதில் காலை முதல் எனது வீட்டுக்கு வந்த நபர்கள் வாகனங்கள் என்பனவற்றின் விவரங்கள் உள்ளன. இந்த சம்பவங்கள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறுவார். அதனால் தான் ஆதாரத்துக்காக இவற்றை ஒளிப்பதிவு செய்துள்ளோம். இந்த விடயம் தொடர்பாக உடனே மனித உரிமை ஆணைக்குழவிலும் முறைப்பாடு செய்துள்ளேன். பொலிஸ் மா அதிபருக்குத் தெரியாமலேயே அவரது திணைக்கள் உயர் அதிகாரிகள் அரசாங்கத்தின் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களாக மாறியுள்ளனர் என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் புலனாகின்றது. நாம் ஏற்னகவே பல தடவைகள் இது பற்றி குறிப்பிட்டுள்ளோம். என்னோடு ஏதாவது பிரச்சினை இருப்பின் பொலிஸார் அதை நேரடியாக என்னுடன் கையாண்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எனது வீட்டுக்கு வருகின்றவர்களை ஏன் விசாரிக்க வேண்டும்.


அளுத்கமை விடயத்தில் முஸ்லிம்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது:

பொலிஸார் குற்றங்களை மூடி மறைக்காமல், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்காமல் தங்களது கடமைகளை சரியாகச் செய்ய வேண்டும் என்பது தான் இந்த நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
அளுத்கமை விடயத்தில் முஸ்லிம்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மதகுரு ஒருவரை தாக்கினார்கள் என்பது தான் அந்த பொய் குற்றச்சாட்டு. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதற்கு கண்ணால் கண்ட சாட்சி அந்தப் பிரதேசத்தை சேர்ந்த ஒரே ஒரு நபர் மட்டும் தான். அவர் தற்போது அங்கு இல்லை. சாட்சி சொல்லக் கூடாது உண்மையை சொல்லக் கூடாது எனக் கூறி அவரை இழுத்துச் சென்று விஷேட அதிரடி படையினர் மிகக் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இன்னமும் அவருக்கு அச்சுறுத்தல்கள் விடப்படுவதால் அவர் அந்த பிரதேசத்தில் இருந்து வெளியேறி வேறு எங்கோ சென்று விட்டார். இப்படி சாட்சிகளை அடித்து அச்சுறுத்திவிட்டு உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. மதகுரு தாக்கப்பட்டார் என்பதை பொலிஸார் மட்டும் அல்ல ஜனாதிபதியும் கூட கூறிவருகின்றார். இது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்லவும் அவரைத் தொடர்ந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் தான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் பணியை அரசாங்கத்தின் அழுக்கு மூடைகளை துப்புரவு செய்யும் லொண்டரி வேலையை செய்து வந்தனர். தற்போது இராணுவத்தின் ஊடகப் பேச்சாளரும் இவர்களுடன் இணைந்துள்ளமை அவரின் நிலையை கேவலமானதாக ஆக்கியுள்ளது. அண்மைய கலவரங்களோடு வெளிநாடுகளுக்கு தொடர்பு உள்ளதாகவும்,இந்தச சம்பவங்களின் பின் கொழும்பிலுள்ள ஒரு நாட்டின் தூதுவர் அரசாங்க உயர் மட்டத்தில் உள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு இது உங்களுக்கு போதுமா என வினவியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறுகின்றார். இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு. அந்தத் தூதுவர் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை இலங்கையில் தூதுவராக வைத்திருக்கவும் முடியாது. உடனே அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். நாட்டில் ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் இல்லாத நேரத்தில் முஸ்லிம்களைத் தாக்குவோம் என்ற தகவல் குறுந்தகவல் வழியாக இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியானது. நாம் உடனே இது பற்றி சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். ஆனால் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.
சிங்கள வீடுகளை அடையாளம் காண பௌத்த கொடியை பறக்கவிடுமாறு அல்லது ஒரு வெசாக் கூட்டையாவது தொங்கவிடுமாறு விரைவில் கேட்கப்படலாம். ஏற்கனவே அப்படிக் கூறி சிங்கள வீடுகள் அடையாளம் காணப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன.

பொலிஸார் தற்போது நிறைய குண்டுகளை கண்டு பிடித்து வருகிறார்கள்:

பொலிஸார் தற்போது நிறைய குண்டுகளை கண்டு பிடித்து வருகிறார்கள். எல்லாம் அளுத்கமை பகுதியில் இருந்து தான் கைப்பற்றப்படுகின்றன. அவை எல்லாமே பாவிக்கப்டாமல் வைக்கப்பட்டுள்ள குண்டுகள். இவ்வளவு குண்டுகள் முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும்; அவர்கள் வசமும் இருந்திருந்தால் அவற்றை அவர்கள் நிச்சயம் பயன்படுத்தி இருக்க வேண்டுமே. ஏன் உயிர்கள் இழக்கப்படும் வரை உடைமைகள் தீக்கிரையாக்கப்படும் வரை அவர்கள் குண்டுகள் இருந்தும் தாக்காமல் இருந்தார்கள். இந்த குண்டுகளை கண்டெடுக்கும் பொலிஸார் அப்பாவி இளைஞர்களையும் கைது செய்து வருகின்றனர். பெலிஸார் நடந்த அத்தனை சம்பவத்தையும் மூடி மறைத்து புதிதாக தடயங்களை உருவாக்கி முழுக் கதையையையும் மாற்றி எழுதப்பார்க்கின்றனர். அப்படி செய்தால் அது இந்த அரசுக்கு மேலும் அழிவையே கொண்டு வரும் என்பதை நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன். இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டிருந்தால் இரு தரப்பிலும் சேதங்கள் ஏற்பட்டிருக்கும். இரு தரப்பிலும் உயிர் இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.இரு தரப்பிலும் காயம் அடைந்திருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எல்லா இழப்புக்களும் நட்டங்களும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளன. நடந்தது இரு தரப்பு மோதல் அல்ல. நிராயுதபாணியான அப்பாவி முஸ்லிம்கள் அரசு ஆதரவு பெற்ற காடையர்களால் தாக்கப்பட்டார்கள் என்பதே உண்மையாகும்.

பொலிஸாரினதும் விஷேட அதிரடிப் படையினரினதும் பாதுகாப்பு ::

பொலிஸாரும் விஷேட அதிரடிப் படையினரும் எமக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போது பொது பல சேனாவினர் லொறிகளைக் கொண்டு வந்து விலமதிப்பற்ற பழம்பொருள்கள் இருந்த வீடுகளை அடையாளம் கண்டு அங்கிருந்து அவற்றை அகற்றிச் சென்றுள்ளனர். அதேபோல் வீடுகளில் இருந்த விலைமதிப்பற்ற மாணிக்கக் கற்கள் மற்றும் பொருள்களையும் பொலிஸார் பார்த்திருக்க சூறையாடிச் சென்றுள்ளனர். அதன் பிறகு தான் அந்த வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சூறையாடிச் சென்ற பொருள்களையாவது அந்த மக்களுக்கு திரும்ப ஒப்படைக்குமாறு நான் பொது பல சேனாவினரை கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். அவற்றை மீட்டுத் தருமாறு பொலிஸாரையும் கேட்டுக் கொள்கிறேன்.இந்தப் பொருள்களை எடுத்துச் சென்ற வாகனங்களின் இலக்கங்கள் கூட பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்தப் பலனும் இல்லை.

ஒரு மனிதன் பொருளாதார ரீதியாக ஒரு நல்ல நிலைக்கு வர எந்தளவு கஷ்டப்படவேண்டியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். தான் பல கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்ததாக ஜனாதிபதி பல இடங்களில் கூறியுள்ளார். அதுபோல் தான் மற்றவர்களும். அப்படியிருக்க இரவோடு இரவாக ஒரு மனிதனை ஒரு குடும்பத்தை நிர்க்கதி நிலைக்கு கொண்டுவந்தால் அது எவ்வளவு பெரிய பாவம். அளுத்கமை சம்பவம் முழு நாட்டுக்கும் ஒட்டு மொத்த இனங்களுக்கும் தலைவலியாக மாறியுள்ளது. சிங்கள மக்களுள் பெரும்பான்மையான மக்கள் இன்றும் கூட அதை நினைத்து பெரும் வேதனைப்படுகின்றனர். இந்த அரசாங்கத்தில் இப்படியொரு சம்பவம் நடந்தமை அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு வக்காளத்து வாங்கிய இந்தியாவின் இந்து பத்திரிகை இன்று இந்த அரசை வசைபாடி ஆசிரியத் தலையங்கம் எழுதியுள்ளது. ஜனாதிபதியும் அவரது சகோதரர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் பொது பல சேனா தலைமைகயங்களுக்கு விஜயம் செய்துள்ளனர். இதன் மூலம் அந்த அமைப்புக்கு இவர்களின் பூரண ஆதரவு, அனுசரணை, ஆசீhவாதம் என்பன உள்ளமை தெளிவாகின்றது. இதன் காரணமாகத் தான் இன்று அந்த அமைப்பு கட்டுக்கடங்காத ஒரு பிரிவாகவும் மாறியுள்ளது. நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர்,இன்னும் பலர் காயம் அடைந்துள்ளனர்,பல வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இரு தினங்களாக இந்த வன்முறைகள் தொடர்ந்தும் பொலிஸாரால் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்ட்டதாகத் தெரியவும் இல்லை. இவ்வளவு நடந்தும் கூட அரசாங்கத் தரப்பில் இருந்து இன்னும் உத்தியோகப்பூர்வமாக ஒரு கண்டன அறிக்கையாவது வெளிவரவில்லை என்றும் இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. சம்பவ தினத்தன்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் பொது பல சேனாவுக்கு கூட்டம் நடத்த அனுமதி அளித்தமையே இந்த வன்செயல்களுக்கு மூல காரணம் என்றும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. யுத்தத்துக்குப் பிந்திய நிலைமைகளைப் பயன்படுத்தி நாட்டை மீளக் கட்டியெழுப்ப இலங்கை இதைவிட எவ்வளவோ உறுப்படியான காரியங்களை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் தமிழர்கள் பிரச்சினைகளுக்கு கூட இன்னும் சரியான தீர்வுகளை எட்டாத நிலையில் இப்போது முஸ்லிம்கள் விடயத்திலும் இலங்கை அரசு குழம்பிப் போய்விட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சட்டததை கையில் எடுக்க யாருக்கும் அனுமதிக்க மாட்டோம் என்று சமூக வலைதலங்களில் செய்திகளை அனுப்புவதற்கு பதிலாக நாட்டில் அமைதியை ஏற்படுத்த இன்னும் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அந்த ஆசிரியத் தலையங்கத்தின் இறுதியில் இந்து பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த வன்முறைகள் தொடங்கி மூன்றாவது நாளில்தான் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலையீட்டால் இராணுவம் அனுப்பப்ட்டு பூரணமாக நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் நேற்று மீண்டும் ஒரு கடைக்கு பின்பக்கத்தால் உடைத்துக் கொண்டு உள்ளே பிரவேசித்து பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

பொலிஸார் ஒரே விடயத்தில் இருவகையான நிலைப்பாட்டை மேற்கொள்வதுதான் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம்;

பொலிஸார் ஒரே விடயத்தில் இருவகையான நிலைப்பாட்டை மேற்கொள்வதுதான் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம். திங்கள் கிழமை முஸ்லிம்களால் நடத்தப்படவிருந்த ஒரு ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக அவசரமாக ஒரு முடிவு எடுத்தனர். சமய உணர்வுகளை இன உணர்வுகளைத் தூண்டும் எந்தவொரு கூட்டத்துக்கும் இனிமேல் அனுமதி அளிப்பதில்லை என்று அவர்கள் அறிவித்தனர். ஆனால் நேற்று பொது பல சேனாவுக்கு கண்டியில் அதிஷ்டான பூஜை என்ற பெயரில் கூடுவதற்கு இடம் அளித்துள்ளனர். அப்படியானால் நாங்களும் விரைவில் காலிமுகத் திடலில் ஒரு மாபெரும் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கலாம் என்று எண்ணுகின்றேன். பொலிஸார் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். எங்களுக்கு எற்பட்ட அநீதிகளை இறைவனிடம் முறையிட நாமும் இவ்வாறு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யலாம் அல்லவா?. இந்த நாட்டு மக்கள் எல்லோருமே தற்போது ஏதோ ஒருவகை அச்சத்தில் தான் வாழுகின்றனர். அப்படியிருக்க ஒரு சிறு கூட்டம் மட்டும் நினைத்தபடி எல்லாம் ஆட்டம் போட அனுமதிக்கப்படுவது என்? சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அரசும் பொலிஸும் இப்படி பாரபட்சமாக நடந்து கொண்டால் இந்த நாட்டில் எப்படி அமைதியும் சமாதானமும் உருவாகும்?.

சட்டததை அப்பட்டமாக மீறியவர்கள், வன்முறைகளைத் தூண்டியவர்கள் எல்லாம் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். மேலும் கூட்டங்களும் பூஜைகளும் நடத்தி வருகின்றனர். ஆனால் ஜனநாயக முறைப்படி மிகவும் சாத்வீகமான முறையில் ஹர்த்தால் அனுஷ்டித்து எதிர்ப்பைக் காட்டியவர்களை பொலிஸார் மோப்பம் பிடித்து வருகின்றனர்.

முஜிபுர் ரஹ்மான் இன்று காலை விசாரணைகளுக்காக இரகசியப் பொலிஸுக்கு::

நாங்கள் இந்த ஹர்த்தாலுக்கு முறைப்படி ஊடகங்கள் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தோம். அமைதியான முறையில் மிகவும் வெறிறகரமாக இந்த ஹர்த்தால் இடம்பெற்றது. நாட்டிலன் எந்தப் பகுதியிலும் அசம்பாவிதங்கள் எதுவும் அன்றைய தினத்தில் இடம்பெறவில்லை என்பதை பொலிஸ் அறிக்கைகள் ஊர்ஜிதம் செய்துள்ளன. பல்வேறு தரப்பினர் அதற்கு ஆதரவு வழங்கினர். ஆனால் இதை ஒரு குற்றமாகக் கருதி அப்பாவி சகோதரர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று காலை விசாரணைகளுக்காக இரகசியப் பொலிஸுக்கு வருமாறு கேட்கப்பட்டுள்ளார். அவர் செய்த தவறு என்ன? சாத்வீகமாக எதிர்ப்பைக் காட்டும் உரிமை கூட எங்களுக்கு கிடையாதா? அரசாங்கம் தனது முழுப்பலத்தையும் பாவித்து ஹர்த்தாலை முறியடிக்க முயற்சி செய்தது. ஆனால் அவை எதுவுமே பலிக்கவில்லை.
நாம் யாரையும் வன்முறைக்கு தூண்டவில்லை. நாம் வன்முறைகளை தூண்டுபவர்களும் அல்ல. வன்முறையை தூண்டி இரத்தக்களரியை ஏற்படுத்தியவர்கள் இன்று நிம்மதியாக உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனநாயக ரீதியில் குரல் கொடுத்தவர்களின் குரல்வளைகள்; இப்போது நசுக்கப்படுகின்றன.

அளுத்கமை சம்பம் தொடர்பாக விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவென்று நியமிக்கப்படவேண்டும். :

அளுத்கமை சம்பம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்குழு நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி சுறுகின்றார். அவரின் நண்பர்களைக் கொண்ட அப்படிப்பட்ட ஒரு விசாரணைக் குழு எமக்கு தேவையில்லை. இந்த சம்பவங்கள் பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவென்று நியமிக்கப்படவேண்டும். அதனாலும் பெரிதாக எதுவும் நடக்கப் போவதில்லை. இருந்தாலும் பல சாட்சிகளைப் பதிவு செய்து மறைந்து கிடக்கும் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் பட்சத்தில் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராக உள்ளோம். இந்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். இதற்கு ஆதரவு வழங்கியவர்கள் உத்தரவுகளை வழங்கியவர்கள் போன்றவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். அதற்கு தேவை ஜனாதிபதி ஆணைக்புகுழுவே தவிர வெறுமனே உயர்மட்ட விசாரணைக் குழுவல்ல. பல சமயத் தலைவர்களும் இதே கருத்தை தான் வலியுறுத்தியுள்ளனர் என்பதையும் சுறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :