அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் பொதுபல சேனாவின் செயற்பாடுகள் என்பன குறித்து கடந்த வியாழக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்திய தினம் ஜனாதிபதி தலைமையில் கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இனங்கள், மதங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுவதற்கு முற்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் என்பனவற்றுக்கு வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் நேரடியாக நிதி கிடைக்கப் பெறுவது இதன்போது ஆராயப்பட்டுள்ளது. ஒரு தூதரகத்திலிருந்து பணம் பெற்றுக்கொள்ளும் நபரின் பெயர் இதன்போது ஆதாரத்துடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சகல விடயங்களையும் உள்ளடக்கியதாக அரசாங்கம் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டு சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.

0 comments :
Post a Comment