வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாதர் சங்கங்களுக்கு 17 இலட்சம் நிதி




த.நவோஜ்

பொருளாதார அபவிருத்தி மூலம் வறுமையற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் கிராம மட்டத்திலுள்ள மாதர் சங்கங்களுக்கூடாக கைத்தொழில் மூலம் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மீள்குடியேற்ற அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட மாதர் சங்கமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. 

இதனடிப்படையில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பதினேழு மாதர் சங்கங்களின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் பதினேழு மாதர் சங்கங்களுக்கும் பதினேழு இலட்சம் ரூபாய் புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. 

வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக நகர அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பேர்டி பெரேரா, மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளர் பொ.ரவீந்திரன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் சந்திபால, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அமைப்பின் தலைவி திருமதி.ருத்திரமலர் ஞானபாஸ்கரன், மீள்குடியேற்ற அமைச்சரின் மகளீர் மேம்பாட்டு அதிகாரி விஜிதா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாகரை பிரதேச அமைப்பாளரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளருமான எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது அதிதிகளால் பதினேழு மாதர் சங்கங்களுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :